அடடே... Apple ஸ்டோரில் வேலைக்கு சேரலாம் போலயே: சம்பளத்தை அள்ளி கொடுக்கும் டிம் குக்.!
ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களையும் போட்டிப்போட்டுக் கொண்டு வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை மையங்களை மும்பை டெல்லி பகுதிகளில் திறந்தது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்டோர்களிலும் கூட்டாகச் சேர்த்து மொத்தமாக 170 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இவர்கள் அதிகபட்சம் 15 மொழிகளில் பேசக்கூடியவர்கள் ஆவர்.

அதேபோல் இந்திய ஆப்பிள் ஸ்டோர்களில் வேலை செய்யும் ஊழியர்கள் பெரும்பாலும் எம்பிஏ, பி டெக், பிஎஸ்சி போன்ற பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இவர்களில் சிலருக்கு மாதம் ரூ.1 லட்சம் வரையிலான சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மற்ற மின்சாதன ஸ்டோர்களில் பணியாற்றி வரும் நிர்வாக அதிகாரிகள் வாங்கும் சம்பளத்தை விட இது மூன்று நான்கு மடங்கு வரை அதிகம் ஆகும்.
அதேபோல் ஆப்பிள் ஸ்டோர் பணியாளர்களில் சிலர் சர்வதேச பல்கலைக்கழகங்களில் படித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அதில் சில பணியாளர்கள் வெளிநாடுகளில் இயங்கி வரும் ஆப்பிள் ஸ்டோர்களில் பணியாற்றி அனுபவம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்திய ஸ்டோர்களில் பணியாற்ற மேலும் சிலருக்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பணியாளர்களின் வேலை நேரம் வியாபார நேரங்களைப் பொருத்து சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மும்பை மற்றும் டெல்லியில் துவங்கப்பட்டு இருக்கும் ஆப்பிள் ஸ்டோர்களை ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்து வாடிக்கையாளர்களை வரவேற்றார். அதேபோல் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், நேஹா தூபியா மற்றும் பல பிரபலங்களை டிம்குக் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்டோர்களை திறந்து வைத்ததோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு மத்திய மந்திரிகளை டிம் குக் சந்தித்துப் பேசினார்.
மேலும் மும்பை வந்த உடன் முகேஷ் அம்பானியை அவரது இல்லத்தில் டிம் குக் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. பின்பு டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனையும் டிம் குக் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு சந்திப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் தனது பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய ரிலையன்ஸ் குழுமத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. மறுபுறம், பெங்களூரு அருகே இருக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி ஆலையை வாங்குவதற்கு டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதேபோல் வரும் ஜூன் 5 ஆம் தேதி WWDC எனப்படும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு நடைபெறவுள்ளது. குறிப்பாக நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின்
புதிய அப்டேட்கள் மற்றும் அறிவிப்புகள் இந்த நிகழ்வில் வெளியிடப்படும். குறிப்பாக ஐபோன், வாட்ச், மேக், டிவி, ஐபேட் போன்ற மாடல்களுக்கு புதிய ஓஎஸ்
அப்டேட்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்ய
உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, xrOS என்றழைக்கப்படும் சாஃப்ட் வேர் அடிப்படையாகக் கொண்டு இந்த மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் மாடலை
அறிமுகம் செய்ய உள்ளது ஆப்பிள் நிறுவனம். மேலும் இந்நிறுவனம் 15-இன்ச் மேக்புக் ஏர், மேம்பட்ட 13-இன்ச் மேக்புக் ஏர், எண்ட்ரி லெவல் 13 இன்ச் மேக்புக் ப்ரோ, ரிப்ரெஷ் செய்யப்பட்ட 24-இன்ச் ஐமேக் மாடல்களை உருவாக்கி வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெரிய மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம், இதில் எம்2 சிப்செட் வழங்க உள்ளதாகத் தெரிவித்து உள்ளது. குறிப்பாக WWDC
எனப்படும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications