பாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.!
இந்திய ராணுவ ரகசியங்களை, இராணுவ படையினருக்கு தெரியாமல் பக்கத்து நாடான பாகிஸ்தானிற்கு விற்ற இந்திய ராணுவப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசம்: இந்திய ராணுவ ரகசியங்களை, இராணுவ படையினருக்கு தெரியாமல் பக்கத்து நாடான பாகிஸ்தானிற்கு விற்ற இந்திய ராணுவப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ ரகசிய தகவல்களை இவர் வாட்ஸ் ஆப் மூலம் பாக்கிஸ்தான் இல் உள்ள ஐ.எஸ்.ஐ உளவுத்துறை நிறுவனத்திடம் பணத்திற்காக விற்றுள்ளார்.

எண்டு-டு-எண்டு எனகிரிப்ட்ஷன்
அவர் வாட்ஸ் ஆப் இல் எண்டு-டு-எண்டு எனகிரிப்ட்ஷன் முறையைப் பயன்படுத்தி இராணுவ ரகசியம் மற்றும் ராணுவம் சார்ந்த முக்கிய தகவல்களை பாகிஸ்தானிற்கு அனுப்பியுள்ளார்.

அதிகாரிகள் நடத்திய சோதனை
அண்மையில் பிராம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் உளவாளி ஒருவர் பாகிஸ்தான் நாட்டிற்கு ராணுவ ரகசியங்களை விற்றதற்குக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இராணுவ அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவர் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது
கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர், இராணுவம் ரகசியங்கள் மற்றும் தகவல்களை பக்கத்து நாட்டிற்கு விற்று பணம் சம்பாதித்துள்ளார். இராணுவ அதிகாரிகள் அவரைக் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

நீதிமன்றம் உத்தரவு
மேலும் அவரைக் கைது செய்து அவருடன் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications