Home
News

அரசுப் பள்ளிகளில் சோலார் பேனல்களா? ரூ.35,000 மின்சார கட்டணம் இப்பொழுது இலவசமானதா?

ஆம் ஆத்மி கட்சித் தலைமையிலான தில்லி அரசாங்கம், மும்முரமாகக் கல்வித் துறையை மேம்படுத்துவதற்கு அயராது பாடுபட்டு வருகிறது. சிறந்த உள்கட்டமைப்பிலிருந்து மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் வரை அனைத்தையும் தில்லி அரசாங்கம் மும்முரமாக மாற்றம் செய்து வருகிறது.

கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சீஸோடியாவின் புது முயற்சி

கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சீஸோடியாவின் புது முயற்சி

இந்த முயற்சியின் ஒரு பகுதியாய், தில்லி அரசாங்கம் அறிமுகம் செய்து வைத்த திட்டத்தின் படி தில்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சோலார் பேனல்கள் பொருத்தப்படுமென்று கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சீஸோடியா தெரிவித்திருந்தார். அவர் அறிவித்த திட்டத்தின் முதற்கட்ட முயற்சியைத் தில்லி அரசாங்கம் தற்பொழுது துவங்கியுள்ளது.

500 அரசுப் பள்ளிகளுக்கு சோலார் பேனல்கள்

500 அரசுப் பள்ளிகளுக்கு சோலார் பேனல்கள்

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 25 அரசாங்க பள்ளிகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் 100 அரசுப் பள்ளிகளில் சோலார் பேனல்கள் பொருத்தும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 500 அரசுப் பள்ளிகளுக்கு சோலார் பேனல்கள் பொருத்தப்படவுள்ளது என்றும் கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சீஸோடியா தெரிவித்திருக்கிறார்.

இலவசமாக இயற்கை மின்சாரம்

இலவசமாக இயற்கை மின்சாரம்

தில்லி அரசாங்கம் கையில் எடுத்துக்கொண்ட இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 25 அரசுப் பள்ளிகளுக்கு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் விளைவாக மாதம் சுமார் ரூ.35,000 வரை மின்சார கட்டணம் செலுத்திவந்த அரசுப் பள்ளிகளுக்கு இனிமேல் இலவசமாக மின்சாரம் கிடைக்குமென்பது தான்.

கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சீஸோடியா டுவீட்

ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், இலவசமாக அரசுப் பள்ளிகளுக்கு இயற்கை முறைப்படி மின்சாரம் வழங்கும் இத்திட்டத்தை அடுத்தபடியாக இன்னும் பல அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இத்திட்டத்தின் வெற்றி பற்றி கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சீஸோடியா தனது டிவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்திருக்கிறார்.

Best Mobiles in India

English summary
Solar Pannel Project Over Delhi Government Schools Brings Down EB Bill To Zero : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X