Just In
- 15 min ago
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
- 1 hr ago
Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?
- 1 hr ago
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- 1 hr ago
பட்ஜெட் விலையில் Xiaomi இன் 32-ஸ்மார்ட் டிவி வாங்க விருப்பமா? 1 இல்ல 4 ஆப்ஷன் இருக்கு: வாங்க பார்ப்போம்.!
Don't Miss
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Movies
சட்டையை கழட்டிவிட்டு ஜிம்மில் ஷாலு ஷம்மு செம வொர்க்கவுட்.. என்னவொரு வெறித்தனம்!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வெறும் கண்ணில் வானத்தை பார்க்காதீங்க.. சூரிய கிரகணத்தை எங்கே, எப்போது பார்க்கலாம்?
பெரும்பாலான இந்திய நகரங்களில் இன்றைய சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். 2022 இன் கடைசி சூரிய கிரகணமாக இது இருக்கும். வடகிழக்கு பிராந்தியத்தின் சில மாநிலங்களில் இந்த கிரகணத்தை சுத்தமாக பார்க்க முடியாது என கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கிரகணம் நடைபெறுகிறது என்பதால் பெரும்பாலான பகுதிகளில் இது தெரிய வாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்
2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தை இன்று உலகம் முழுவதும் பல இடங்களில் உள்ள மக்கள் பார்க்க இருக்கின்றனர். ஐரோப்பா, யூரல்ஸ், மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஆசியா, ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை சேர்ந்தவர்கள் சூரிய கிரகணத்தை ஏறத்தாழ துல்லியமாக பார்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த கிரகணத்தை காண முடியும் என கூறப்படுகிறது.

எப்போது வானத்தை பார்க்கலாம்?
நிகழும் சூரிய கிரகணத்தை இந்தியாவின் எந்தெந்த பகுதிகளில் இருந்து பார்க்க முடியும் என்ற விவரத்தை பார்க்கலாம். இந்தியாவின் தலைநகர் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, சண்டிகர், போபால் உள்ளிட்ட பல நகரங்கள் இருந்து காண முடியும் என கூறப்படுகிறது.
சென்னையில் உள்ளவர்கள் இந்த கிரகணத்தை மாலை 5:13 மணி முதல் 5:45 மணி வரை காணலாம். பெங்களூருவில் 5:12 மணி முதல் 5:56 மணி வரை காணலாம். இந்த நேரங்கள் வெளியான தகவலின் அடிப்படையிலானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வெளியிட்ட தகவல்
இதுகுறித்து தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் உள்ள தகவலை பார்க்கலாம். பகுதி கிரகணம் மாலை 5:14 மணிக்கு தொடங்கி 5:44 மணிக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25 ஆம் தேதி பகுதி நேர கிரகணம் நிகழும் எனவும் இது மேற்கு ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் பகுதிகளில் நன்றாக தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த கிரகணத்தை பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சிறிதளவு மட்டுமே தெரியும்
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறிதளவு மட்டுமே தெரியும் என கூறப்படுகிறது.

80% வரை துல்லியமாக தெரியும்..
ரஷ்யா மற்றும் கஜகஸ்தானில் சில பகுதிளில் இந்த சூரிய கிரகணம் 80% வரை துல்லியமாக தெரியும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தெரியும் என கூறப்படுகிறது.

கண் காயம் மற்றும் கண்பார்வை இழப்பை தவிர்க்கவும்
பகுதி அல்லது வளைய கிரகணங்களை எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல என கூறப்படுகிறது. சூரிய கிரகண கண்ணாடிகள் அல்லது வெல்டர் கண்ணாடிகளை (shade No. 14) பயன்படுத்தி சில நொடிகள் மட்டும் கிரகணத்தை காணுமாறு பார்வையாளர்களுக்கு மையம் அறிவுறுத்தியுள்ளது. கண்களில் காயம் மற்றும் கண்பார்வை இழப்பை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

வெறும் கண்களால் பார்க்கக் கூடாது
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலிலும் சூரிய கிரகணம் தெரியும் என கூறப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு முன் இந்த கிரகணம் நிகழ இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சென்னை மற்றும் கொல்கத்தாவில், கிரகணத்தின் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடங்கள் மற்றும் 12 நிமிடங்களாக கிரகணம் இருக்கும் என கூறப்படுகிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. சிறிது நேரம் கூட பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. சூரியனின் பெரும்பகுதியை சந்திரன் மறைத்தாலும் அது கண்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

2022 கிரகண விவரங்கள்
2022 ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ்கிறது. இதில் இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் என மொத்தம் 4 கிரகணங்கள் இந்தாண்டு நிகழ்கிறது. இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நடந்தது. தொடர்ந்து மே 16 அன்று மற்றொரு சந்திர கிரகணமும், அக்டோபர் 25 அன்று சூரிய கிரகணமும், நவம்பர் 8 அன்று சந்திர கிரகணமும் நிகழ்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470