தமிழகத்தின் முதல் விர்ச்சுவல் தொழில்நுட்ப கண்காட்சி! உடனே உங்களை அப்டேட் செய்துக்கொள்ளுங்கள்!

|

ஞாயிற்றுக்கிழமையன்று என்ன செய்யலாம்? என்ன படம் பார்க்கலாம்? என்ன சீரிஸ் பார்க்கலாம்? என்று மண்டைக்குள் பலவிதமான யோசனைகள் நமக்கு தோன்றியிருக்கும். பொதுவாக வெறுமென கழியும் ஞாயிற்றுக்கிழமையை, இந்த வாரம் நீங்கள் சற்று பயனுள்ளதாய் மாற்றிக்கொள்ள உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

நம்மை அப்டேட் செய்து கொள்வதா? அது எப்படி?

நம்மை அப்டேட் செய்து கொள்வதா? அது எப்படி?

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் நாமும் நம்மை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு அப்டேட் செய்து கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் உங்களை அப்டேட் செய்வதற்கான நாள் தான் இன்றைய தினம். என்னப்பா சொல்ற, நம்மை அப்டேட் செய்து கொள்வதா? நாம் என்ன சாப்ட்வேரா? நம்மை அப்டேட் செய்து கொள்வதற்கு என்று நீங்கள் கேட்கலாம். ஆம், கண்டிப்பாக ஸ்டோரேஜ் யூனிட் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது மூளையை தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல் நீங்கள் அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு

அப்படி உங்களை அப்டேட் செய்து கொள்ள முதலில் பல மென்பொருள் பற்றிய தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக உங்களுக்குப் பிடித்தமான மென்பொருளை பற்றிய புரிதல் அவசியம், இதை எங்கே கற்றுக் கொள்வது? எப்படி கற்றுக்கொள்வது என்று நீங்கள் யோசித்திருந்தால், உங்களுக்கான வழியை விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு ஒரு மேகா டெக்னாலஜி விர்ச்சுவல் விழா மூலம் உருவாக்கியுள்ளது.

பூமிக்கு அடியில் 'மாபெரும் நிலத்தடி கடல்' இருப்பது கண்டுப்பிடிப்பு..!பூமிக்கு அடியில் 'மாபெரும் நிலத்தடி கடல்' இருப்பது கண்டுப்பிடிப்பு..!

விர்ச்சுவல் கண்காட்சி

விர்ச்சுவல் கண்காட்சி

பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என்று நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களுக்கு எந்தவிதமான மென்பொருள் மீது சந்தேகம் இருந்தாலும் சரி அதைப் பற்றி புரிந்து கொள்ள இந்த அமைப்பு உங்களுக்கான விர்ச்சுவல் மேடையை உருவாக்கியுள்ளது. கொரோனா தோற்ற காரணமாக இம்முறை இந்த கண்காட்சியை விர்ச்சுவல் மேடையில் இந்த அமைப்பு பாதுகாப்பான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இலவசமாக சாப்ட்வெர் டவுன்லோட் செய்ய வாய்ப்பு

இலவசமாக சாப்ட்வெர் டவுன்லோட் செய்ய வாய்ப்பு

மென்பொருள் தொடர்பான எந்த சந்தேகமாக இருந்தாலும் சரி, அதை நீங்கள் இந்த விர்ச்சுவல் கண்காட்சியின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த கண்காட்சியில் மற்றொரு மாபெரும் சிறப்பு உங்களுக்குத் தேவையான மென்பொருளை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் விர்ச்சுவல் முறையில் ஒரு முழுமையான தொழில்நுட்ப கண்காட்சி நடப்பது இதுவே முதல் முறையாகும்.

Google எச்சரிக்கை: ஆபத்தான அடுத்த 6 ஆப் பட்டியலை வெளியிட்ட கூகிள்! உடனே டெலீட் செய்யுங்கள்!Google எச்சரிக்கை: ஆபத்தான அடுத்த 6 ஆப் பட்டியலை வெளியிட்ட கூகிள்! உடனே டெலீட் செய்யுங்கள்!

டிஜிட்டல் விழிப்புணர்வு

டிஜிட்டல் விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு மென்பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்த ஞாயிற்றைப் பயனுள்ளதாய் மாற்றிக்கொள்ளவும், இந்த மாபெரும் டெக்னாலஜி விர்ச்சுவல் விழாவில் கலந்துகொள்ளவும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் vglug.org . சும்மா ஒரு முறை ட்ரை செய்து தான் பாருங்களேன், நிச்சயம் உங்களின் நேரம் வீணாகாது.

Best Mobiles in India

Read more about:
English summary
Software Freedom Day Virtual Exhibition Watch At Your Home On 20th September 2020 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X