பிரபலமான மென்பொருள் தொழிலதிபர் ஜான் மெக்காஃபி ஸ்பெயினில் தற்கொலை.! காரணம் என்ன?
அண்மையில் வெளிவந்த தகவலின்படி, McAfee antivirus software உருவாக்கிய மென்பொருள் தொழிலதிபர் ஜான் மெக்காஃபி(John McAfee) ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக அவரின் வழக்கறிஞர் ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், McAfee என அவரது பெயரைக் கொண்ட அந்த மென்பொருள், உலகம் முழுவதும் சுமார் 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் உலகின் முதல் வணிகரீதியானAnti-malware software-ஐ மெக்காஃபி 1987ஆம் ஆண்டில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவந்த தகவலின் அடிப்படையில், வரி செலுத்தாத குற்றச்சாட்டுகளின் தொடர்பில், மெக்காஃபியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஸ்பானிய உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளத்திருந்தது. இதை தொடர்ந்து தான் மெக்காஃபி தற்கொலை செய்துகொண்டதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

Anti-virus எனப்படும் மென்பொருள் தயாரிப்பில் முன்னோடியாக இருந்த ஜான் மெக்காஃபி ஸ்பெயினில் 9 மாதங்களாகச் சிறையில் இருந்தார். பின்பு தாம் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டால், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என அவர் சென்ற மாதம்
நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

சில காரணங்களால் ஜான் மெக்காஃபி அமெரிக்காவில் வருமான வரியை 8 ஆண்டுகளுக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதைப் பற்றி விசாரணை துவங்கும் என்று கணித்த ஜான் மெக்காஃபி அமெரிக்காவிலிருந்து வெளியேறி, பெரிய பாய்மரப்படகு ஒன்றில்வாழ்ந்து வந்தார். மேலும் கடந்த ஆண்டு ஆக்டோபர் மாதம் இவர் ஸ்பெயினல் பிடிபட்டார்.

இதை தொடர்ந்து ஜான் மெக்காஃபி ஸ்பெயினில் 9 மாதங்களாகச் சிறையில் இருந்தார். நேற்று இவர் பார்சிலோனா நகரில் உள்ள சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

நாம் கம்பியூட்டர் அல்லது லேப்டாப் எதை இயங்கினாலும், இன்று அதற்கு ஆண்ட்டி வைரஸ் தான் முதல் தேவையாக உள்ளது. இணையம் வழியாகவும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் வழியாகவும் வரும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுத்து நிறுத்தி, அவற்றின் மோசமான நடவடிக்கை களிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அரணாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்செயல்படுகின்றன. அதன்படி ஜான் மெக்காஃபி உருவாக்கிய ஆண்ட்டி வைரஸ் மிகவும் அதிகமாக பயன்பட்டது என்று தான்கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications