ஃபேஸ்புக்கை குழந்தைகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் அப்ளிகேஷன்!

Posted By: Karthikeyan
ஃபேஸ்புக்கை குழந்தைகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் அப்ளிகேஷன்!

சமூக வலைத்தளங்கள் சிறுவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு உலகம் முழுவதிலும் இருந்து அவ்வப்போது வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் பேஸ்புக் சமூக வலைத்தளமும் விதிவிலக்கல்ல. ஏனெனில் பேஸ்புக்கின் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் எழுந்துள்ளன.

எனவே குழந்தைகள் பேஸ்புக்கை தவறாக பயன்படுத்தாமல் சரியாக பயன்படுத்தும் வகையில் ஒரு புதிய அப்ளிகேசன் வந்துள்ளது. இந்த இலவச பேஸ்புக் அப்ளிகேசனை பென் கூரியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தயாரித்து இருக்கின்றனர். இந்த அப்ளிகேசன் சோஷியல் ப்ரைவசி ப்ரொடெக்டர் என்று அழைக்கப்படுகிறது. இந்த அப்ளிகேசனைப் பயன்படுத்தி பெற்றோர் தமது குழந்தைகள் பேஸ்புக்கைத் தவறாகப் பயன்படுத்துவதை மிக எளிதாகத் தடுக்கலாம்.

இந்த பேஸ்புக் அப்ளிகேசன் பல அடுக்கு பாதுகாப்பைக் கொண்டது. இந்த அப்ளிகேசன் மூலம் பெற்றோர் தனது குழந்தைகளின் நண்பர்களின் அட்டவணையை எளிதில் கண்காணிக்க முடியும். அதோடு அறிமுகம் இல்லாத நபர்களின் குறிப்புகளையும் களையச் செய்ய முடியும்.

குழந்தைகள் தங்களின் சுதந்திரம் பாதிக்கப்படாதவாறு, அதே நேரத்தில் அவர்கள் பேஸ்புக்கை சரியான பாதையில் பயன்படுத்துகிறார்களா என்று கண்காணிக்க பெற்றோர்களுக்காகவே இந்த அப்ளிகேசனைத் தயாரித்திருப்பதாக பென் கூரிய பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம் பெற்ற மைக்கேல் பயர் கூறுகிறார்.

இனி குழந்தைகள் பேஸ்புக்கை தவறாகப் பயன்படுத்த முடியாது என்று நம்புவோம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot