Home
News

இந்தியாவை கலக்கும் சைனா செட்.. iPhone தோத்துடும் போலயே.. வெறும் ரூ.1499-க்கு இதுல என்னலாம் இருக்கு பாருங்க..

என்ன தான் பல சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன்கள் (smartphone) இந்திய சந்தைக்குள் விற்பனைக்கு வந்தாலும், இன்னும் பலருக்கு சைனா செட் (china set mobile phone) தான் மிகவும் பிடித்தமான போனாக இருக்கிறது. இதற்கு காரணம், முதலில் விலை மலிவானது என்றாலும், சந்தையில் இல்லாத பல அம்சங்களை இந்த போனில் நம்மால் பார்க்க முடிகிறது. அடிமட்ட விலையில் அதிக அம்சங்களை ஒரே போனில் வழங்கும் திறமை உண்மையிலேயே சைனா செட் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. இதை யாராலும் மறுக்கவே முடியாது.

இப்படி தற்போது இந்தியாவிற்குள் ஒரு புதிய சைனா செட் (china set went viral in India) அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் (social media viral) ஆனது. இதில், வடக்கு நாட்டில் உள்ள ஒருவர் புதிதாக ஒரு சைனா செட்டை வாங்கியிருக்கிறார். அந்த சைனா செட்டை தனது கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் காண்பிக்கும் வீடியோ பதிவாகியுள்ளது.

இந்தியாவை கலக்கும் சைனா செட்.. iPhone தோத்துடும் போலயே..

இந்தியாவை கலக்கும் சைனா செட்.. iPhone தோத்துடும் போலயே:

சைனா செட் என்றாலே, அன்று முதல் இன்று வரை சவுண்டான ஸ்பீக்கர்களுக்கு (powerfull mobile speakers) பெயர் போனது. 90 மற்றும் 2K வருடங்களில் அதிக எண்ணிக்கையிலான இளசுகளின் கைகளில் தவழ்ந்தது சைனா செட் தான் என்பதை நம்மால் மறுக்க முடியாது. அப்படி வீடியோவில் காண்பிக்கப்பட்ட சைனா செட் போனில் பெரிய சைசில் இரண்டு டூயல் ஸ்பீக்கர்கள் (dual speaker) போனின் பின்பக்கத்தில் பொறுத்தப்பட்டுள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது.

அந்த போனின் முன்பக்கத்தில், பெரிய LED டார்ச் லைட் (LED torch light) விளக்குகள் இருப்பதையும் வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. LED டார்ச் லைட் என்றதும் நோக்கியா போனில் (Nokia mobile) இருக்கும் மின்மினிப்பூச்சி சைஸ் LED லைட் என்று நினைத்துவிடாதீர்கள். இது லட்டு மாதிரி பெரிய சைஸ் LED டார்ச் லைட்டாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாசம் பல அடி தூரம் வரை ஒளிதரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

போனில் ஃபேன்-ஆ? என்னங்க சொல்றீங்க?

இதுவரை எந்தவொரு போனிலும் நீங்கள் எதிர்பார்த்திடாத அம்சமாக இதில் எலக்ட்ரிக் மினி பேன் (electric mini fan) சாதனம் எல்லாம் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் பக்கவாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சீக்ரெட் சேம்பர் (secret chamber) உள், மினி பேன்-னின் (mini fan) இறக்கை மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதை தனியாக எடுத்து போனின் மற்றொரு பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள ஃபேன் ஃபிக்சிங் ஹோல்லை (fan fixing hole) கொண்டுள்ளது.

இதில் ஃபேன் இறக்கையை பொருத்தி ஸ்விட்ச் ஆன் செய்தால் போதும், சில்லென்ற காற்றை ஃபேன் தரத் துவங்குகிறது. இந்த போனில் 0.3MP ரியர் கேமரா (rear camera) அம்சமும் உள்ளது. 0.3MP கேமராவாக இருந்தாலும், நல்ல புகைப்படங்களை இது எடுக்கிறது. இந்த போன் 32MB ஸ்டோரேஜ் (storage) உடன் 32MB ரேம் (RAM) உடன் வருகிறது.

16GB மெமரி.. 5000mAh பேட்டரி.. விலை வெறும் ரூ.1,499 மட்டுமா?

இது 16GB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் (External storage) அம்சத்தை ஆதரிக்கிறது. இந்த போன் 5000mAh பேட்டரி (battery) உடன் வருகிறது. இந்த போன் அல்பாநுமரிக் (Alphanumeric) கீபேட் உடன் வருகிறது. இணையத்தில் வைரல் ஆன இந்த போனின் மாடல் பெயர் ஸ்னேக்ஸியன் போல்டு 50கே (Snexian BOLD 50K) என்பதாகும். இது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.1,999 ஆகும்.

ஆனால், தற்போது Snexian BOLD 50K போன் ரூ. 1,499 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. இது பிளாக் க்ரீன் (black green), பிளாக் ரெட் (black red) மற்றும் காஸ்மிக் பிளாக் (cosmic black) ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த சைனா செட்டை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர் வாங்க தயாரா என்று கேளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Snexian BOLD 50K mobile is the new China set went viral on internet has feature that no iPhone has today
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X