மொபைல் போனிற்காக மூன்று பள்ளி மாணவிகளுக்குச் சரமாரியான கத்திக் குத்து.!

நியூ டெல்லி அருகேயுள்ள ஜஹாங்கிர்புரி மாநகரத்தில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மூன்று பள்ளி மாணவிகளை வழிப்பறி கும்பல் சரமாரியாகக் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Sharath
|

நியூ டெல்லி அருகேயுள்ள ஜஹாங்கிர்புரி மாநகரத்தில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மூன்று பள்ளி மாணவிகளை வழிப்பறி கும்பல் சரமாரியாகக் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் போனிற்காக மூன்று பள்ளி மாணவிகளுக்குச் சரமாரியான கத்திக் குத்து

12 முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகள் நேற்று மாலை ஜஹாங்கிர்புரி மஹிந்திரா பார்க் பகுதியில் அடையாளம் தெரியாத வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டனர்.

9 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவி

9 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவி

பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் மார்பில் ஆழமான காயத்துடனும், மற்றொருவர் கையில் ஆழமான காயத்துடனும் அருகில் உள்ள பாபா ஜகிரீவன் ராம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்ட மாணவிகள் சர்வோதயா உயர் நிலைப்பள்ளி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் இரண்டு மாணவிகள் அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பும் மற்ற ஒரு மாணவி 8 ஆம் வகுப்பும் படித்து வருகின்றார்.

 வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த மாணவிகள்

வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த மாணவிகள்

பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த மாணவிகள், பிகானர் சௌக் பகுதியை அடைந்தபோது ​​சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை வழி மறித்து, மாணவிகளின் மொபைல் போன்களையும் பணத்தையும் பிடுங்கி வழிப்பறி செய்துள்ளனர்.

 சரமாரியாக கத்தியால் குத்திய கும்பல்

சரமாரியாக கத்தியால் குத்திய கும்பல்

மாணவிகள் மர்ம நபர்களை எதிர்க்க முன்வந்து பொருட்களை தர மறுத்ததும் மர்ம கும்பல் அவர்களைச் சரமாரியாக கத்தியால் குத்தியது. இதைக் கண்ட பகுதி மக்கள் விரைந்து சென்றதும் மாணவிகளைக் கத்தியால் குத்திய மர்ம கும்பல் மொபைல் போன் மற்றும் பணத்துடன் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டது.

ஜஹாங்கிர்புரி காவல் துறை

ஜஹாங்கிர்புரி காவல் துறை

இச்சம்பவம் மாலையில் ஆட்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நடந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட நடவடிக்கையாக அந்தப் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காமிராக்களும் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறதென்று வடமேற்கு மாவட்டத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். விரைவில் இவர்கள் அடையாளம் கண்டு கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Snatchers stab three school girls in Delhi : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X