இனி இந்த சிப்செட் போன் தான் டாப் பெர்ஃபார்மன்ஸ்.. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 உடன் வரவிருக்கும் போன் லிஸ்ட் இதோ..
ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சக்தி வாய்ந்த சாதனங்களாக மாறிவருகின்றன. இதற்கு முக்கிய காரணமே, ஸ்மார்ட்போன்களில் இருக்கும் சிப்செட்கள் தான். கடந்த மாதம் வரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் தான் சக்தி வாய்ந்த சிப்செட்டாக இருந்தது.
ஆனால், இனி நிலைமை மாறப்போகிறது. காரணம், அடுத்த தலைமுறை சக்தி வாய்ந்த சிப்செட் சாதனத்தை குவால்காம் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. குவால்காம் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை சக்தி வாய்ந்த புதிய சிப்செட் மாடலாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்பை இந்த மாத இறுதியில் வெளியிட உள்ளது.

இந்த புதிய தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை ஆதரிக்கும் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் பட்டியலையும் குவால்காம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன் படி, எந்த பிராண்டில் இருந்து வெளிவர தயார்நிலையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் இருக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சமீபத்திய அறிக்கைகளின்படி, சியோமி (Xiaomi) நிறுவனம் அக்டோபர் 27 ஆம் தேதி அன்று சியோமி 14 (Xiaomi 14) சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பெரும் முதல் பிராண்டு இதுவாகும்.
Xiaomi 14 தொடரைத் தொடர்ந்து, ஒன்பிளஸ் 12 (OnePlus 12), iQOO 12 தொடர், ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro), மெய்ஜு 21 (Meizu 21) தொடர், நுபியா ரெட் மேஜிக் 9 (Nubia Red Magic 9) வரிசை, ஹானர் மேஜிக் 6 (Honor Magic 6) தொடர் மற்றும் ஒப்போ (OPPO) உள்ளிட்ட பல்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்து அடுத்தடுத்த வெளியீடுகளை எதிர்பார்க்கலாம் என்று டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (DCS) பரிந்துரைத்துள்ளது.

ஒன்பிளஸ் 12, iQOO 12 மற்றும் iQOO 12 Pro ஆகியவை சீன சந்தையில் நவம்பரில் அறிவிக்கப்படும் என்று இந்த ஃபிளாக்ஷிப்களைச் சுற்றியுள்ள லீக் தகவல்கள் கூறுகின்றன. iQOO 12 இந்தியாவில் அதே மாதத்தில் அறிமுகமாகும் என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro) பற்றிய பல தகவல்கள் சமீபத்திய அறிக்கைகளில் வெளிவந்துள்ளது.
இருப்பினும், ரியல்மி (Realme) இந்த சிப்செட் உடன் இந்த மாடலை இந்த ஆண்டு அல்லது 2024 இல் அறிவிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், டிசிஎஸ் (DCS) இன் புதிய தகவல் Realme GT 5 Pro டிசம்பரில் அறிமுகமாகலாம் என்று கூறுகிறது. சீனாவில் இந்த ஆண்டு டிசெம்பர் மாதம் Meizu 21 தொடர் ஏஅறிமுகமாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
நுபியா ரெட் மேஜிக் 9 (Red Magic 9) தொடர் கேமிங் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு டிசம்பர் அல்லது ஜனவரி 2024 இல் அறிமுகமாகலாம். ஹானர் மேஜிக் 6 (Honor Magic 6) வரிசையானது 2024 இல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் அறிமுகமாகலாம். இது பிப்ரவரி 2024 இல் அதிகாரப்பூர்வமாக வரக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
Vivo X100 Pro+ மற்றும் OPPO Find X7 தொடர் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எக்சினோஸ் 2400 (Exynos 2400) மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3) ஆகியவற்றைக் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) தொடர் ஜனவரி 2024 இல் உலகளவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








