Home
News

இனி ஐபோன்லாம் அலரப்போகுது! புது Snapdragon 8 Gen 3 ரெடி! அசுர வேகம் - அல்டிமேட் பெர்ஃபார்மென்ஸ்!

குவால்காம் நிறுவனம் அதன் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வரவிருக்கும் புதிய சிப்செட் மாடல், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல போகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் சமீபத்திய சிப்செட் மாடலாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 இருக்கிறது. இந்த சிப்செட் தற்போது சில ஸ்மார்ட்போன்களுடன் வருகிறது. இதற்கு அடுத்த தலைமுறை சிப்செட் மாடலாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 விரைவில் வரவிருக்கிறது. இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எத்தகையது? இதன் பெர்ஃபார்மென்ஸ் எப்படி பட்டது என்ற விபரங்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதை பற்றி முழுமையாக பார்க்கலாம் வாங்க.

இனி ஐபோன்லாம் அலரப்போகுது! புது Snapdragon 8 Gen 3 ரெடி! அசுர வேகம்!

குவால்காம் தகவலின் படி, அதன் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும். இதுவரை, அதன் செயல்திறன் குறித்து பல வதந்திகள் வெளிவந்துள்ளன. அதவது, Snapdragon 8 Gen 3 சிப்செட்டின் பெர்ஃபார்மென்ஸ் விபரங்கள் கிடைத்துள்ளது. சுவாரஸ்யமாக, முந்தைய யூகங்களில் பெரும்பாலானவை செயல்திறன் அடிப்படையில் சிப்செட் ஒரு அசுரனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது, Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன் ஒப்பிட்டு பார்க்கையில், Snapdragon 8 Gen 3 சிப்செட்டின் செயல்திறன் 50% அதிகரிப்பை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 50% அதிகரிப்பு என்றால், உண்மையில் இந்த சிப்செட் அசுர வேகத்தில் செயல்படப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.Tech_Reve இன் சமீபத்திய அறிக்கை படி, இந்த புது சிப்செட் நிலையான தலைமுறை மேம்படுத்தல்களை வழங்கும் என்று கூறுகிறது.

அதாவது, ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 இலிருந்து ஒரு பெரிய முன்னேற்றத்தை வழங்காது. ஆனால், மாறாக, இது ஜிபியு மற்றும் சிபியு செயல்திறன்களை ஒட்டுமொத்தமாக 25% கூடுதல் வேகத்துடன் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும், ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 இன்னும் ஆரம்ப கட்ட சோதனையில் தான் உள்ளது.

இனி ஐபோன்லாம் அலரப்போகுது! புது Snapdragon 8 Gen 3 ரெடி! அசுர வேகம்!

எல்லாவற்றிற்கும் மேலாக, இது வெளிவரும் போது பெரிய மாற்றங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. GFXBench இன் ES3.1 சோதனையில் Snapdragon 8 Gen 3 சிப்செட் 280 fps இல் செயல்படுகிறது என்றும், இதேநேரத்தில், Snapdragon 8 Gen 2 ஆனது சுமார் 220FPS இல் செயல்படும் என மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. செயல்திறன் அதிகரிப்பு தோராயமாக 30% என்பதை இது குறிக்கிறது.

இருப்பினும், முந்தைய வதந்திகள் Adreno 750 செயல்திறன் 50% ஊக்கத்தை வழங்கும் என்று சுட்டிக்காட்டியது. ஸ்னாப் டிராகன் 8 ஜெனரல் 3 தற்போது அன்டுட்டுவில் சுமார் 1,600,000 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக சமீபத்திய லீக் தகவல் குறிப்பிடுகிறது. Asus ROG 7 Ultimate, Snapdragon 8 Gen 2 உடன், Antutu இல் 1,330,011 மதிப்பெண்களைப் பெற்றது. இது CPU இன் அடிப்படையில் 20% உயர்வைக் குறிக்கிறது.

எனவே, ஒட்டுமொத்தமாக, அடுத்த ஜென் சிப்செட் அதன் முன்னோடியை விட 25% அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதன் மூலம் ஸ்மார்ட்போன் கேமிங் அனுபவம், பயனர் அனுபவம் என்று எல்லாமே மேம்படப்போகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் எதிர்காலத்தில், ஸ்மார்ட்போன்கள் சூப்பர் கம்ப்யூட்டர் போல செயல்படப்போகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Snapdragon 8 Gen 3 Chipset Performance Details Leaked With 50 Percentage Jump
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X