Home
News

Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?

இப்போது, நம்மில் பெரும்பாலானோர் கைகளில் ஸ்மார்ட்போன் டிவைஸ் இருக்கிறது. குறைந்தது 3 வருடங்களுக்கு ஒருமுறை அல்லது 5 வருடங்களுக்கு ஒரு முறை, நம் கையில் இருக்கும் பழைய ஸ்மார்ட்போன் டிவைஸை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. காலத்திற்கு ஏற்றார் போல, நம்மையும் நம்முடைய டிவைஸையும் அப்கிரேட் செய்துகொள்வது கட்டாயமாகிறது. நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர் என்றால், கட்டாயமாக Snapdragon சிப்செட் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வது சிறப்பானது.

Snapdragon 8+ Gen 1 தான் சக்தி வாய்ந்த லேட்டஸ்ட் சிப்செட்டா?

Snapdragon 8+ Gen 1 தான் சக்தி வாய்ந்த லேட்டஸ்ட் சிப்செட்டா?

குறிப்பாக சமீபத்திய Snapdragon 8+ Gen 1 சிப்செட் பற்றி அறிந்துகொள்வது இன்னும் சிறப்பானது. காரணம், Snapdragon 8+ Gen 1 சிப்செட் தான், இப்போது லேட்டஸ்ட்டாக அறிமுகம் செய்யப்பட்ட சிப்செட் மாடலாகும். இதற்கு முந்தைய தலைமுறை சிப்செட் மாடலான Snapdragon 8 Gen 1 தான் இப்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன் மாடல்களில் கிடைக்கிறது. சரி, அடுத்து நீங்கள் ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்கப்போகிறீர்கள் என்றால், Snapdragon 8+ Gen 1 வாங்குவது சிறந்ததா? அல்லது Snapdragon 8 Gen 1 வாங்குவது சிறந்ததா என்பதைப் பார்க்கலாம்.

இந்தியாவிற்குள் 8+ ஜென் 1 சிப்செட் உடன் கிடைக்கும் முதல் போன் இது தானா?

இந்தியாவிற்குள் 8+ ஜென் 1 சிப்செட் உடன் கிடைக்கும் முதல் போன் இது தானா?

புதிய Asus ROG Phone 6 அறிமுகத்துடன், குவால்காம் (Qualcomm) இன் மேம்படுத்தப்பட்ட ஸ்னாப் டிராகன் 8+ ஜென் 1 (Snapdragon 8+ Gen 1) சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் டிவைஸ் இப்போது இந்தியச் சந்தையில் களமிறங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் Snapdragon 8+ Gen 1 போனாக அசுஸ் நிறுவனத்தின் கேமிங் போன் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, விரைவில் OnePlus, iQOO மற்றும் பிற பிராண்டுகளில் இருந்தும் Snapdragon 8+ Gen 1 சிப்செட்டை ஆதரிக்கும் டிவைஸ் அறிமுகமாகவிருக்கிறது.

Snapdragon 8 Gen 1 சிப்செட் எவ்வளவு சிறப்பானது?

Snapdragon 8 Gen 1 சிப்செட் எவ்வளவு சிறப்பானது?

இருப்பினும், Xiaomi 12 Pro, iQOO 9 Pro, OnePlus 10 Pro மற்றும் Samsung Galaxy S22 சீரிஸ் போன்ற பல ஸ்மார்ட்போன் டிவைஸ்களில் Snapdragon 8 Gen 1 சிப்செட் தான் பயன்படுத்தப்படுகிறது. Snapdragon 8+ Gen 1 அறிமுகத்திற்குப் பிறகு இப்போது ஸ்மார்ட்போன் பயனர்களுக்குள் எந்த சிப்செட் சிறந்தது? எந்த சிப்செட் உடைய டிவைஸை வாங்குவது சிறந்தது? என்ற குழப்பம் உருவாகியுள்ளது. இந்த குழப்பம் உங்களுக்கும் இருந்தால், எது சிறந்தது என்பதை அறிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

புதிய Snapdragon 8+ Gen 1 கொண்ட ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?

புதிய Snapdragon 8+ Gen 1 கொண்ட ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?

புதிய Snapdragon 8+ Gen 1 உடன் இப்போதைக்கு ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மட்டும் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், உங்களுக்கு பிடித்த பிராண்டில் இருந்து ஒரு புது போனை வாங்க வேண்டும் என்றால், நீங்கள் கட்டாயமா அதற்கு காத்திருக்க வேண்டும். அப்படி உங்களிடம் காத்திருக்க போதிய நேரம் இல்லை என்றால், பழைய Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயங்கும் புதிய டிவைஸை நம்பி வாங்கலாமா என்பதை முடிவு செய்வதற்கு முன், Snapdragon 8 Gen 1 சிப்செட்டில் எழுந்த கோளாறு என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Snapdragon 8 Gen 1 சிப்செட்டில் உள்ள சிறிய கோளாறு என்ன தெரியுமா?

Snapdragon 8 Gen 1 சிப்செட்டில் உள்ள சிறிய கோளாறு என்ன தெரியுமா?

குவால்காம் சிப்செட் உடன் இயங்கும் போனுக்காக இதுவரை உருவாக்கப்பட்ட சிப்செட்களில் Snapdragon 8 Gen 1 என்பது மிகவும் சக்திவாய்ந்த சிப்செட்டாக இருந்தாலும், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ஆனது அதன் தெர்மல் பெர்ஃபார்மென்ஸ் திறனுக்காக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாகப் பயனர்கள் விரைவாக உயரும் வெப்பநிலை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மோசமான பேட்டரி ஆயுள் பற்றிப் புகாரளித்துள்ளனர். Snapdragon 8 Gen 1 இல் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை Snapdragon 8+ Gen 1 இல் நிச்சயம் சரிசெய்வதாக நிறுவனம் உறுதியளித்திருந்தது.

Snapdragon 8 Gen 1 vs Snapdragon 8+ Gen 1 சிப்செட்களுக்குள் என்ன வித்தியாசம்?

Snapdragon 8 Gen 1 vs Snapdragon 8+ Gen 1 சிப்செட்களுக்குள் என்ன வித்தியாசம்?

இந்த இரண்டு சிப்செட்களும் வெறும் இரண்டு மாத இடைவெளியில் உருவாக்கப்பட்டது என்பதனால் பெரியளவில் வித்தியாசம் இருக்காது. ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 ஆனது ப்ளூடூத் 5.2-க்கு பதிலாக, அதிக கிளாக் ஸ்பீட் வேகத்தைக் கொண்டு புளூடூத் 5.3 ஆதரவைக் கொண்டுள்ளது. இருப்பினும், போன்களுக்கிடையேயான ஸ்பெக் ஷீட்டின் மற்ற பகுதிகள் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இருப்பினும், முக்கிய வேறுபாடு பெர்பார்மென்ஸ் தொழில்நுட்பத்தில் இருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எப்படி சிறந்தது? இதில் என்ன ஸ்பெஷல்?

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எப்படி சிறந்தது? இதில் என்ன ஸ்பெஷல்?

புதிய ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ஆனது சாம்சங் ஃபவுண்டரிக்கு பதிலாக TSMC ஆல் தயாரிக்கப்பட்டுள்ளது. மிட்-சைக்கிள் அப்டேட்டிற்காக ஃபவுண்டரிகளை மாற்றுவது குவால்காம் அடிக்கடி செய்யும் ஒன்று அல்ல என்றாலும், சில பகுதிகளில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 அதன் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 செய்யத் தவறிய விஷயங்களை ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிறப்பாகச் செய்துள்ளது என்று அறிக்கைகள் பரிந்துரைத்துள்ளன.

இதில் உங்களுக்கான பொருத்தமான சிப்செட் எது?

இதில் உங்களுக்கான பொருத்தமான சிப்செட் எது?

இங்கே முதலில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு அம்சம் கிடைக்கும் தன்மை. Realme GT 2 Pro, iQOO 9 Pro மற்றும் OnePlus 10 Pro போன்ற போன்களில் Snapdragon 8 Gen 1 கிடைக்கிறது. இந்த போன்கள் இப்போது உடனடியாக சந்தையில் கிடைக்கின்றன, அதே நேரத்தில் Snapdragon 8+ Gen 1 உடன் கூடிய பெரும்பாலான போன்கள் இன்னும் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். விநியோகச் சங்கிலி நெருக்கடியைத் தொடர்ந்து Snapdragon 8+ Gen 1 இல் இயங்கும் டிவைஸ்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு இன்னும் சில மாதங்கள் கூட ஆகலாம்.

கவனிக்க வேண்டிய இரண்டாவது முக்கியமான விஷயம்

கவனிக்க வேண்டிய இரண்டாவது முக்கியமான விஷயம்

நாம் கவனிக்க வேண்டிய இரண்டாவது முக்கியமான விஷயம், விலை நிர்ணயம். ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டில் இயங்கும் போன்கள் விலை உயர்ந்ததாக இருக்கும். புதிய சிப்செட் மேம்படுத்தப்பட்டிருப்பதால் மட்டும் விலை அதிகரிக்கப்படவில்லை. பொதுவாக சிப்செட்களின் விலைகள் ஒட்டுமொத்தமாக உலகளவில் அதிகரித்துள்ளதும் ஒரு காரணமே. இந்த காரணத்தினால் 2023 இல் பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்புகளின் விலை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புது 8+ ஜென் 1 சிப்செட் போன்கள் அதிகம் வெளியான பிறகு, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 இல் இயங்கும் போன் விலை சரிவைக் காணும்.

எந்த சிறந்த சிப்செட் போனை இறுதியில் வாங்குவது?

எந்த சிறந்த சிப்செட் போனை இறுதியில் வாங்குவது?

எது எப்படியாக இருந்தாலும், Snapdragon 8 Gen 1 இல் இயங்கும் போன்கள் மட்டும் தான் இப்போது வாங்கக் கிடைக்கிறது. மல்டி டாஸ்கிங், கூடுதல் நேர கேமிங் என்று எல்லாமே இதில் சிறப்பாகத் தான் இருக்கும். ஆனால், தெர்மல் பெர்பார்மென்ஸ் சிக்கல் உங்களை அதிகம் பாதிக்காது என்றால், நீங்கள் தாராளமாக Snapdragon 8 Gen 1 போன்களை வாங்கலாம். இந்த சிக்கல்கள் எதுவும் இல்லாமல், நிம்மதியாக ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை பயன்படுத்த விரும்பினால் நீங்கள் கட்டாயம் Snapdragon 8+ Gen 1 போன்களுக்காக காத்திருப்பதே சிறப்பானது. இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்யலாம் என்ற இறுதி முடிவு உங்களுடையது.

Best Mobiles in India

English summary
Snapdragon 8 Gen 1 vs 8+ Gen 1 Smartphones Which Is Best To Buy In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X