Snapdragon 8 Elite 2 சிப்செட் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன Phone-களில் இடம்பெறும்?
என்னது இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் இருக்கிறதா? அப்போது இதையே வாங்கலாமே என்று கூறும் அளவிற்கு எஸ்டி 8 எலைட் சிப்செட் பிரபலமாக உள்ளது. இதற்கிடையில் குவால்காமின் அடுத்த பிளாக்ஷிப் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) எப்போது அறிமுகமாகும், இது என்னென்ன ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது
டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவலின்படி, ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 என்பது, பெயர் குறிப்பிடுவது போலவே, கடந்த ஆண்டு அக்டோபரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரிஜினல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் லான்ச் டைம்லைன்: குவால்காம் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட்டை அறிமுகம் செய்யலாம். அதாவது இந்த சிப்செட், 2025 செப்டம்பரில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஆப்பிளின் ஐபோன் 17 சீரீஸிற்கு குவால்காமின் நேரடி சவாலாக இருக்கலாம்.
ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட்டில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் ஆனது அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க செயல்திறன் மேம்பாடுகளுடன் வரும். இது சிபியு 4.4 ஜிகாஹெர்ட்ஸ் பேஸிக் ப்ரெக்வன்ஸியில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய மாடலின் 4.32 ஜிகாஹெர்ட்ஸ்-ஐ விட சற்று அதிகமாகும்.
கூடுதலாக, இந்த புதிய சிப்செட் இரண்டாம் தலைமுறை செல்ப்-டெவலெப்டு சிபியு கட்டமைப்பையும் கொண்டிருக்கலாம். ஜிபியு-வானது 12MB இலிருந்து 16MB ஆக அதிகரிக்கப்படலாம். இதன் விளைவாக, இந்த புதிய சிப்செட் ஆனது 30% ஒட்டுமொத்த செயல்திறன் ஊக்கத்தை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .
மெனுஃபேக்சரிங்கை பொறுத்தவரை, ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் அந்த TSMC-யின் மூன்றாம் தலைமுறை 3என்எம் செயல்முறையை பயன்படுத்துகிறது. இது கிளாக்டு ஸ்பீட்-ஐ மாற்றாமல், முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது 9% மின் நுகர்வை குறைக்கும், அதே வேளையில் 4% செயல்திறன் ஊக்கத்தையும் வழங்கும். இந்த புதிய சிப்செட் புதிய SME அறிவுறுத்தல் தொகுப்பையும் ஒருங்கிணைக்கிறது, இது Arm64 கட்டமைப்பின் ஒரு பகுதியாகும், இது மல்டிமீடியா மற்றும் கிராபிக்ஸ் செயலாக்க திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது
எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் இடம்பெறலாம்? ஷாவ்மீ 16 (Xiaomi 16) மற்றும் ஷாவ்மீ 16 ப்ரோ (Xiaomi 16 Pro) ஆகிய இரண்டும் தான் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செடடை கொண்ட முதல் ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. இதுதவிர்த்து ரெட்மி கே 90 ப்ரோ, ரியல்மி ஜிடி 8 ப்ரோ, ஒன்பிளஸ் 14, ஐக்யூ 14, சியோமி 16 அல்ட்ரா, விவோ எக்ஸ் 300 அல்ட்ரா மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களிலும் இந்த சிப்செட் இடம்பெறலாம்
ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 7000mAh பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது . இது உண்மையாக இருந்தால் ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனில் நாம் கண்ட 5400mAh பேட்டரி உடன் ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும். ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போனின் 7000mAh பேட்டரி ஆனது செல் அதிக அடர்த்தி கொண்ட சிலிக்கான்-கார்பன் பேட்டரி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பேட்டரி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேட்டரி தொழில்நுட்பம், மிகவும் திறமையான நெக்ஸ்ட் ஜெனரஷன் ஃபிளாக்ஷிப் சிப்செட்டின் செயல்திறன் ஆதாயங்களுடன் இணைக்கப்படும் என்பதால், இது பிரீமியம் போன்களின் சகிப்புத்தன்மையை மறுவரையறை செய்ய கூடியதாக இருக்கும். ஆனால் இங்கே இன்னொரு பிரச்சனையும் உள்ளது - பெரிய பேட்டரி என்றாலே காம்பாக்ட் டிசைன் இருக்காது. நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 15 ஒரு காம்பாக்ட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருந்தது; ஆனால் ஷாவ்மீ 16 அப்படி இருக்காது!


Click it and Unblock the Notifications








