ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி : ஸ்னாப்டீல் அறிவிப்பு!

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகள் கடந்த மாதம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனையும் செய்யப்பட்டு வருகின்றது. வழக்கம் போல ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சந்தை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதியான இன்று முதல் இந்தியாவில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளின் விற்பனை துவங்கியது. இதனைத் தொடர்ந்து புதிய கருவிகளுக்கு முதல் நாளிலேயே அதிக தள்ளுபடியினை ஸ்னாப்டீல் இணையதளம் அறிவித்துள்ளது.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

இந்திய இணைய வர்த்தக நிறுவனமான ஸ்னாப்டீல் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஐபோன் கருவிகளை ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலைக்கு விற்பனை செய்ய இருக்கின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தள்ளுபடி

தள்ளுபடி

அதன் படி ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் பயனர்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி உடனடியாக வழங்கப்படுகின்றது.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகள் இன்று முதல் இந்தியாவில் கிடைக்கின்றது. இவற்றின் விலை ரூ.60,000 இல் இருந்து துவங்குகின்றது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிரத்தியேக சலுகை

பிரத்தியேக சலுகை

ஸ்னாப்டீல் தளத்தில் அமெக்ஸ் கார்டு மூலம் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளை வாங்கும் பயனர்களுக்கு இந்த விலை குறைப்பு பிரத்தியேக சலுகை என்றே கூற வேண்டும்.

வட்டி

வட்டி

இந்தத் தள்ளுபடி மற்ற சலுகைகளுடன் வழங்கப்படுகின்றது. அதாவது தள்ளுபடியுடன் கருவியை வாங்குவதோடு மாத தவணை முறைகளுக்கு வட்டியில்லா தவணை முறை வசதி போன்றவையும் வழங்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Snapdeal To Offer Rs 10,000 Off On Latest iPhone Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X