Home
News

ஸ்னாப்டீலில் ஃபோன் திருவிழா: ரூ.299-ல் இருந்து ஃபோன்கள் விற்பனை.!

இந்த விற்பனையின் போது, ரூ.1,999 என்று வழக்கமான விலையில் விற்பனை செய்யப்படும் ஜியோ ஃபோன் (4ஜி), தள்ளுபடி விலையாக ரூ.1,500-க்கு வழங்கப்படுகிறது.

By Jijo Gilbert

இ-காமர்ஸ் தளமான ஸ்னாப்டீலில், ஜூலை 20 முதல் 23 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 'அம்சமான ஃபோன் திருவிழா' (Feature Phone Festival) நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு, ரிலையன்ஸ் ஜியோ, மைக்ரோமேக்ஸ், ஐ கால் மற்றும் நோக்கியா போன்ற பல முன்னணி நிறுவனங்களின் அம்சமான ஃபோன்களின் விற்பனை நடைபெற உள்ளது. இந்த ஃபோன்களின் விற்பனை விலை ரூ.299-ல் இருந்து துவங்குகிறது.

ஸ்னாப்டீலில் ஃபோன் திருவிழா: ரூ.299-ல் இருந்து ஃபோன்கள் விற்பனை.!

இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, அம்சமான ஃபோன்களின் மீது 57% வரை நுகர்வோருக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, எஸ்பிஐ வங்கியின் டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கும் போது, மேலும் 10% தள்ளுபடி பெறலாம்.

மைக்ரோமேக்ஸ் பாரத்

மைக்ரோமேக்ஸ் பாரத்

இந்த விற்பனையின் போது, ரூ.1,999 என்று வழக்கமான விலையில் விற்பனை செய்யப்படும் ஜியோ ஃபோன் (4ஜி), தள்ளுபடி விலையாக ரூ.1,500-க்கு வழங்கப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் பாரத், அதன் உண்மையான விலையான ரூ.2,599-க்கு பதிலாக, ரூ.1,945-க்கு அளிக்கப்படுகிறது.

 நோக்கியா

நோக்கியா

மற்றொரு அம்சமான ஃபோனான நோக்கியா 105, இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, ரூ.1,018 என்ற தள்ளுபடி விலையில் அளிக்கப்படுகிறது.

தள்ளுபடி விலையில்

தள்ளுபடி விலையில்

உள்நாட்டு மொபைல் தயாரிப்பாளரான ஐ கால் அளிக்கும் ஐகால் K3310, ஐகால் K71, ஐகால் K72, ஐகால் K11 மற்றும் ஐகால் K66 உள்ளிட்ட அம்சமான ஃபோன்கள், இந்த ஃபோன் திருவிழாவில் விற்பனைக்கு வருகிறது. மேற்கூறிய இந்த ஃபோன்கள் முறையே, ரூ. 598, ரூ. 299, ரூ. 299, ரூ. 499 மற்றும் ரூ. 576 என்ற தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

எஃப்எம் ரேடியோ

எஃப்எம் ரேடியோ

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், இந்த ஃபோன்களில் கள்ள நோட்டு கண்டறிதல், சூப்பர் பேட்டரி அம்சம், எஃப்எம் ரேடியோ, மியூஸிக் பிளையர், இரட்டை சிம் மற்றும் ப்ளூடூத் இணைப்பு போன்ற பல தனித்துவமான அம்சங்களைப் பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Snapdeal launches Feature Phone Festival offers feature phones starting at Rs 299: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X