இரண்டாம் தலைமுறை கண்ணாடிகளை அறிமுகப்படுத்தும் ஸ்னாப்சாட்.!
அடிப்படையில் சன் க்ளாஸான இந்த கண்ணாடியில், ஸ்னாப்சாட்டிற்காக வீடியோக்களை பதிவு செய்யும் வகையில் கேமராவும் உள்ளது.
ஸ்னாப்சாட் என்னும் பிரபல செயலியின் பின்னால் இருக்கும் நிறுவனமான ஸ்னாப், இரண்டாம் தலைமுறை கண்ணாடிகளை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. முதலில் அமெரிக்காவில் வெளியாகும் இந்த சன் கிளாஸின் விலை 150 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடிப்படையில் சன் க்ளாஸான இந்த கண்ணாடியில், ஸ்னாப்சாட்டிற்காக வீடியோக்களை பதிவு செய்யும் வகையில் கேமராவும் உள்ளது. கடந்த தலைமுறை மாடலை விட இந்த இரண்டாம் தலைமுறை கண்ணாடி, சிறிய அளவிலான கண்ணாடியுடன் வெளிவருவதால் எளிதாக அணியவும் எடுத்து செல்லவும் முடியும்.
இந்த கருவியில் மேம்படுத்தப்பட்ட வசதியாக உள்ள கேமரா மூலம் எச்.டி ரெசல்யூசன் வீடியோக்களை எடுக்கமுடியும். பயனர் 10நொடி வீடியோவை ஒரு முறை எளிதாக தட்டுவதன் மூலமும், இரண்டு மற்றும் மூன்று முறை தட்டுவதன் மூலம் முறையே 20 மற்றும் 30நொடி வீடியோக்களை எடுக்கமுடியும். மேலும் ஒரு நொடிக்கு தொடர்ந்து அழுத்தி பிடிப்பதன் மூலம் பயனர் போட்டோ எடுக்க முடியும்.


இந்த புதிய மாடலில் கேமராவுடன் இரண்டாவது மைக்ரோபோனை இணைத்திருப்பதன் மூலம் கடந்த மாடலை விட சிறப்பாக ஆடியோவை பதிவு செய்யமுடியும். அது மட்டுமில்லாமல், இந்த கருவி மற்றும் போன் இடையேயான பரிமாற்ற வேகம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்பை விட தற்போது மூன்றிலிருந்து நான்கு மடங்கு வேகம் அதிகரித்துள்ளதாக ஸ்னாப் நிறுவனம் கூறுகிறது.

இந்த சன் க்ளாஸ் நீர் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. இந்த கண்ணாடியை வைக்கும் கேஸ் மூலம் இந்த கருவியை சார்ஜ் செய்யவும் முடியும். பேட்டரி திறனை பொறுத்தமட்டில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 வீடியோக்களை பதிவு செய்து பரிமாற்றம் செய்யும் திறனுடையது இந்த இரண்டாம் தலைமுறை ஸ்னாப் கண்ணாடிகள். கண்ணாடி வைக்கும் கேஸ் மூலம் சார்ஜ் செய்யும் போது, நான்கு முறை தொடர்ந்து சார்ஜ் செய்துகொள்ளும் திறன் வாய்ந்து இந்த ஸ்னாப் கண்ணாடி கேஸ்.


Click it and Unblock the Notifications








