ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் படம் எடுத்து ஆடிய பாம்பு.! ஓட்டம் பிடித்த அதிகாரிகள்- மக்கள்.!
கண்ணூர் தொகுதியில் உள்ள ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் உள்ளே பாம்பு இருந்ததினால் வாக்கு பதிவு சிறிது நேரம் தாமதமானது. வாக்களிக்க வந்த வாக்காள மக்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்துள்ளனர்.
கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்து வருகிறது. கண்ணூர் தொகுதியில் உள்ள ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் உள்ளே பாம்பு இருந்ததினால் வாக்கு பதிவு சிறிது நேரம் தாமதமானது. வாக்களிக்க வந்த வாக்காள மக்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்துள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

காலை 7 மணி முதல் வாக்கு பதிவு
கேரளா மாநிலத்தில் இன்று காலை 7 மணி முதல் அமைதியாகப் பல இடங்களில் வாக்குப் பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பாம்பு
கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட மயில் காண்டகை என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பாம்பு இருந்து பீதியை ஏற்படுத்தியுள்ளது.

படம் எடுத்து ஆடிய பாம்பு
ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் இருந்து சத்தம் கேட்டுள்ளது, மொத்தமாக இயந்திரம் ஆட துவங்கியுள்ளது. வாக்களிக்க வந்த நபர் உற்று நோக்கும் பொழுது இயந்திரத்தின் உள் பாம்பு இருப்பது தெரியவந்துள்ளது. சிறிது நேரத்தில் பாம்பு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திலிருந்து வெளியே வந்து படம் எடுத்து ஆடியுள்ளது .

அலறியடித்து ஓட்டம்
பாம்பைப் பார்த்த வாக்காளர் மற்றும் அதிகாரிகள் அறையைவிட்டு அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்துள்ளனர். காவல்துறையினரின் உதவியுடன் பாம்பைப் பத்திரமாகக் கைப்பற்றி காட்டில் விட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைப்பட்டது.

வாக்குப் பதிவு எந்திரங்கள் கோளாறு
இதேபோல் கேரள மாநிலத்தில் உள்ள பல இடங்களில், காலை வாக்குப்பதிவு துவங்கிய சிறிது நேரத்தில் பல வாக்குப் பதிவு எந்திரங்கள் சரியாக இயங்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications