Home
News

ஏ.டி.எம் அறைக்குள் படம் எடுத்த பாம்பு.! பணம் எடுக்கல ஆனா படம் எடுத்துச்சாம்.!

கோவை, தண்ணீர்ப்பந்தல் சாலையில் உள்ள ஐடிபிஐ ஏ.டி.எம் வளாகத்தில் பாம்பு நுழைந்து படம் எடுத்து ஆடிய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

கோவை, தண்ணீர்ப்பந்தல் சாலையில் உள்ள ஐடிபிஐ ஏ.டி.எம் வளாகத்தில் பாம்பு நுழைந்து படம் எடுத்து ஆடிய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

ஏ.டி.எம் மெஷின் பின்னால் பாம்பு

ஏ.டி.எம் மெஷின் பின்னால் பாம்பு

ஏ.டி.எம் இல் பணம் எடுக்கச் சென்ற பயனர் ஒருவர், ஏ.டி.எம் மெஷின் பின்னால் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ந்து போய் அலறியடித்துக் கூக்குரலிட்டு வெளியே ஓடி வந்துள்ளார். பட்டப்பகலில் நகரப் பகுதியில் உள்ள ஏ.டி.எம் அறைக்குள் பாம்பு வந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

பாம்பைக் கண்டு ஓட்டம் பிடித்த மக்கள்

பாம்பைக் கண்டு ஓட்டம் பிடித்த மக்கள்

ஏ.டி.எம் அறைக்குள் படம் எடுத்த பாம்பைப் பார்த்து அலறிய அலறலைக் கேட்டு அருகில் உள்ளவர்களும், பாம்பைக் கண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். ஏ.டி.எம் அறைக்குள் பாம்பு இருப்பது பற்றி உடனே வங்கி மேனேஜர் இடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட பாம்பு

பிடிபட்ட பாம்பு

வங்கிக்குக் கிடைத்த புகாரின் பெயரில் அருகே உள்ள காவல் நிலையத்தில் ஏ.டி.எம் அறைக்குள் பாம்பு இருப்பதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. பின்பு சிறிது நேரத்தில் பாம்பு பிடிக்கும் நபர்களை வரவழைத்து, ஏ.டி.எம் அறைக்குள் இருந்த பாம்பைத் தேடி பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

 பாம்பு பணம் எடுக்கல ஆனா படம் எடுத்துச்சாம்

பாம்பு பணம் எடுக்கல ஆனா படம் எடுத்துச்சாம்

ஏ.டி.எம் அறையில் பிடிபட்ட பாம்பை வனத்துறையினரின் உதவியுடன் காட்டில் விடுவித்துள்ளனர். ஏ.டி.எம் அறைக்குள் பாம்பு பணம் எடுக்கல ஆனா படம் எடுத்துச்சாம் என்று நெட்டிசன்ஸ்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Snake Found Inside the ATM - Watch Cobra Rescue Video : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X