டிஜிட்டல் இந்தியா : நேரடியாக களத்தில் இறங்கிய மோடி!!

By Meganathan
|

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன எனலாம். அந்த வகையில் பிரதமர் மூலம் இந்தியர்களுக்கு நேரடியாக மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் அனுப்பும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இ-சம்பார்க்

இ-சம்பார்க்

இந்திய அரசின் புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் சார்ந்த தகவல்களை குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பும் திட்டம் தான் இ-சம்பார்க்.

அறிவிப்பு

அறிவிப்பு

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்சமயம் குடிமகன்கள், தொழில்முனைவோருக்கு நீட்டிக்கப்படுவதோடு இதன் மூலம் அவர்களுடன் அரசு சார்ந்த திட்டங்களில் இணைப்பில் இருக்க இந்த திட்டம் வழி செய்கின்றது.

இ-சம்பார்க்

இ-சம்பார்க்

தற்சமயம் வரை இ-சம்பார்க் திட்டத்தில் சுமார் 80 லட்சம் மின்னஞ்சல் முகவரிகளும் ஒரு கோடி மொபைல் போன் நம்பர்களும் இருக்கின்றன. இவைகளில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளின் தொடர்புகளும் அடங்கும்.

தகவல்

தகவல்

மேலும் இன்று வரை சுமார் 42 கோடி மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

க்ரவுடு சோர்சிங்

க்ரவுடு சோர்சிங்

அரசு உருவாக்கும் புதிய க்ரவுடு சோர்சிங் திட்டம் மூலம் இந்திய குடிமகன்கள் இந்த திட்டத்திற்காக தங்களை பதிவு செய்து கொள்ள முடியும். இதற்கென பிரத்யேக ஆன்லைன் போர்டல் ஒன்றும் துவங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து

கருத்து

இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கும் குடிமகன்களுக்கும் இருக்கும் இடைவெளி குறைவதோடு மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கவும் பயன் தரும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
SMS alerts directly from PM Modi. Read more in Tamil. some simple tricks that could extend your phone's battery life.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X