மாசடைந்த காற்றை உறிஞ்சிக்கொண்டு, சுத்தமான காற்றை வெளியிடும் புகை கோபுரம்.! டெல்லியில் புதிய ஏற்பாடு.!
இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் டெல்லியில் ஸ்மோக் டவர் எனப்படும் காற்றை சுத்தம் செய்யும் புகை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் முதன் முறையாக
இதுபோன்ற கோபுரம் டெல்லியில் தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகம் என்று கூறப்படுகிறது. எனவே காற்று மாசை குறைக்க டெல்லிஅரசு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக டெல்லி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்த போதும் மாசு குறையவில்லை.

இதை தொடர்ந்து தான் காற்றை சுத்தம் செய்து அனுப்பும் ஸ்மோக் டவர் எனப்படும் புகை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி கன்னாட் பிளேசில் அமைக்கப்பட்டுளள் இந்த புகை கோபுரத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நேற்று திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து பேசிய அவர், நாட்டிலேயே முதல் முறையாக காற்றை சுத்தம் செய்ய டெல்லியில் புகை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கருவி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

அதேபோல் இந்த கோபுரம், மேலே இருக்கும் மாசடைந்த காற்றை உறிஞ்சிக்கொண்டு, சுத்தமான காற்றை அடிப்பகுதியில் இருந்து வெளியிடும் எனவும், பின்பு விநாடிக்கு ஆயிரம் கனமீட்டர் காற்றை சுத்தப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும் இதை இப்போது சோதனை ரீதியாக அமல்படுத்துகிறோம். பின்பு இதன் செயல்பாட்டை நிபுணர்கள் முழுமையாக ஆய்வு செய்வார்கள். அப்படி நல்ல பலன் அளித்தால், டெல்லியில் இன்னும் நிறைய புகை கோபுரங்கள் அமைக்கப்படும். ஒருவேளை பலன் அளிக்காவிட்டால்,வேறு தொழில்நுட்பத்தை தேட வேண்டி இருக்கும் என்று கூறினார் அரவிந்த் கெஜ்ரிவால். அதேபோல் இந்த திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் என கருதுகிறோம் என்று கூறினார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள்.

அதேபோல் இந்த புகை கோபுரம் 24 மீட்டர் உயரம் கொண்டது எனவும், கோபுரத்தில் 1200 ஏர் பில்டர்கள் உள்ளன எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது போன்ற கோபுரம் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








