கர்வமாக சொல்லுங்கள் "ஆமாம் நான் 'கருப்பு' தான்..!"

Written By:

இந்த உலகத்திலேயே எது தெரியுமா ரொம்ப கஷ்டம் - நாம் நாமாக இருப்பது தான்..! இவன் குண்டு, அவள் கருப்பு என்று சொல்லி சொல்லி அடுத்தவர்களுக்காகவே வாழும்படி நம்மை உருவாக்கிவிட்டு இருக்கிறது, நம்ம 'கிண்டல் செய்யும்' சமூகம்..!

கர்வமாக சொல்லுங்கள்

அந்த கிண்டல்களையும், கேலிகளையும் தகர்த்து எரிவது சுலபமில்லை தான். ஆனால் "ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா" முடியும். நான் குண்டு இல்லை, நான் கருப்பு இல்லை என்று பொய் வேசம் போடுவதை நிறுத்திக் கொண்டு, இதுதான் நான், இதுதான் என் உடல், இது தான் என் நிறம் என்று கர்வத்தோடு இருந்தால் எந்த கிண்டலும் கேலியும் நம்மை ஒன்றும் செய்யாது, செய்யவும் முடியாது..!

செல்பீ; நரி மூஞ்சி : 2016-ல் கலக்க போகும் ஸ்மைலிக்கள்..!

அந்த மாதிரியான நிற வேறுபாடுகள், நிற காழ்ப்புணர்ச்சிகள் இனி வேண்டாமே..?! என்ற எண்ணத்தில் உருவாக்கப் பட்டுள்ளதே ஆப்பிள் நிறுவனத்தின் இந்த - அனைத்து வகை நிறத்தில் ஆன ஸ்மைலிக்கள்..!

கர்வமாக சொல்லுங்கள்

இதன் மூலம் வெள்ளையாக இருக்கும் ஸ்மைலிக்களை மட்டுமின்றி நாம் எப்படி இருக்கிறோமே, அப்படியான நிற ஸ்மைலிக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிதான் நான் இருக்கிறேன் என்ற நிஜ தன்மையையும், இயல்பு தான் அழகு என்ற நம்பிக்கையையும் இதன் மூலம் பெற முடியும் என்று நம்பலாம்

Read more about:
English summary
The new emoji options include different skin color and hair combinations for a slew of characters.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot