தல சுத்தது: மலிவு விலையில் இப்படி ஒரு ஸ்மார்ட் வாட்ச்சா? அண்ணன் ஆப்பிள்-க்கு வாரிசு ரெடி!
Noisefit Twist ஆனது ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகள், மாதவிடாய் சுகாதார கண்காணிப்பு ஆதரவு என பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மலிவு விலையில் அறிமுகமாகி இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Noisefit Twist ஸ்மார்ட்வாட்ச்
Noisefit Twist ஸ்மார்ட்வாட்ச் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் சமீப காலமாக இந்த நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றே கூறலாம். மலிவு விலையில் ஏணைய ஸ்மார்ட்வாட்ச்களை நாய்ஸ்ஃபிட் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது Noisefit Twist என்ற ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ப்ளூடூத் காலிங் அம்சம்
Noisefit Twist ஸ்மார்ட்வாட்ச் என்பது ப்ளூடூத் காலிங் அம்சத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை, நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகள், மாதவிடாய் சுகாதார கண்காணிப்பு கருவி என பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் பிராண்ட் ஆக Noise இருக்கிறது.

நாய்ஸ் இணை நிறுவனர் கருத்து
Noisefit Twist குறித்து நாய்ஸ் இணை நிறுவனர் அமித் காத்ரி கூறுகையில், "ஒவ்வொரு வெளியீட்டிலும் எங்கள் முயற்சியானது, வாடிக்கையாளர்களின் வளரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான புதுமையான தயாரிப்புகளை அறிமுகம் செய்வதே ஆகும். NoiseFit Twist ஆனது தனித்துவமான சுற்று டயல், மேம்பட்ட காலிங் அனுபவம் மற்றும் சிரமம் அளிக்காத காட்சி ஆதரவு என பல அம்சங்களை வழங்கும். சிறந்த வாழ்க்கை துணையாக இது செயல்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

Noisefit Twist விலை மற்றும் கிடைக்கும் தன்மை
Noisefit Twist விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.1999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது பிளாக், ஒயின், சில்வர், மிட்நைட், ப்ளூ, கோல்ட் மற்றும் பிங்க் வண்ண விருப்பத்தில் அறிமுகமாகி இருக்கிறது. Noisefit Twist ஸ்மார்ட்வாட்ச் ஆனது அமேசான் மற்றும் நாய்ஸ் இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்கலாம்.

Noisefit Twist சிறப்பம்சங்கள்
Noisefit Twist சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 240*240 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 246 PPI பிக்சல் அடர்த்தி கொண்ட 1.38 இன்ச் TFT ரவுண்ட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 550 நிட்ஸ் பிரகாச ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இல் கூடுதலாக உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோஃபோன் ஆதரவு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இன் பேட்டரி நுகர்வு என்பது குறைவாக இருக்கும். எனவே நீடித்த பேட்டரி ஆயுளை பயனர்கள் பெறலாம்.

வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்பு
கூடுதலாக பயனர்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் லேக்-ப்ரீ அழைப்புகளை அனுபவிக்க முடியும். இதில் டயல் பேட் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இளம்வயதினருக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கிறது.
NoiseFit Twist ஸ்மார்ட்வாட்ச் ஆனது IP68 ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டிருக்கிறது என்பது உறுதி செய்யப்படுகிறது.

ஆரோக்கிய கண்காணிப்பு அம்சம்
ஆரோக்கிய கண்காணிப்பு அம்சங்களாக, SPO2 அளவுகள், இதயத் துடிப்பு, தூக்கம் மற்றும் சுவாச முறைகள், செயல்பாட்டு நிலைகள் போன்ற பல்வேறு முக்கிய தேவைகளை கண்காணிக்கும் தன்மை இதில் உள்ளமைக்கப்பட்டிருக்கிறது.

100+ விளையாட்டு முறைகள்
இந்த ஸ்மார்ட்வாட்ச் இல் Noise Health Suite ஆதரவு இருக்கிறது. இதன்மூலம் 100+ விளையாட்டு முறைகள் கண்காணிக்கப்படுகிறது. மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு ஆதரவும் இதில் இருக்கிறது. Noise Buzz மூலம் 10 தொடர்புகள் வரை சேமிக்க முடியும். ஸ்மார்ட்போனை தொடாமல் பல்வேறு பணிகளை இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலமாகவே மேற்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








