மார்க்கெட்டின் புதிய Camera King வரார், வரார்.. 1-inch சென்சார் உடன் Xiaomi-யின் புது போன்.. SmartSens தயவில்!
கேமரா டிப்பார்ட்மெண்ட் (Camera Department) என்று வந்துவிட்டால் ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் எப்போதும் "நெகிழ்வானதாகவே" இருக்கும். அது சோனி (SONY) கேமராவா அல்லது சாம்சங் (SAMSUNG) கேமராவா என்றெல்லாம் பார்க்காது, தனது பிராண்டின் கீழ் ஒரு நல்ல கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால.. என்ன தேவையோ அதற்காக "வளைந்து கொடுக்கும்" மனப்பான்மையுடன் இருக்கும்.
உதாரணத்திற்கு ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) ஸ்மார்ட்போனில் சோனி சென்சார் (SONY Sensor) பயன்படுத்தப்பட்டது; அதே சமயம் ஷாவ்மீ நிறுவனத்தின் பல ஸ்மார்ட்போன்களில் 200 மெகாபிக்சல் சாம்சங் ISOCELL HP9 கேமரா பயன்படுத்துகிறது மற்றும் ஆம்னிவிஷன் (Omnivision) காம்போனன்ட்களையும் கூட ஷாவ்மீ பயன்படுகிறது.

இந்த வரிசையில் ஷாவ்மீ நிறுவனம் ஸ்மார்ட்சென்ஸ் (SmartSens) உடன் கைகோர்க்கலாம் என்பது போல் தெரிகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஷாவ்மீ நிறுவனத்தின் லைக்கா (Leica) பிராண்டிங் கேமரா ஃபிளாக்ஷிப் போன்களுக்கான மற்றொரு சப்ளையராக ஸ்மார்ட்சென்ஸ் மாறக்கூடும் என்கிற தகவல் கிடைத்துள்ளது
இன்னும் சொல்லப்போனால் - ஷாவ்மீ 16 அல்ட்ரா (Xiaomi 16 Ultra) ஸ்மார்ட்போனிலேயே ஸ்மார்ட்சென்ஸ் சென்சார் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பழைய சோனி LYT-900ஸ் சென்சாருக்கு மாற்றாக ஹூவாய் புரா 80 அல்ட்ரா (Huawei Pura 80 Ultra) ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் அதே 1-இன்ச் சென்சாரை ஷாவ்மீ தேர்வு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
இது உண்மையில் நடக்குமா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் நடக்கும் பட்சத்தில் ஷாவ்மீ ரசிகர்களுக்கு இது மிகவும் உற்சாகமான தகவலாக இருக்கும் மற்றும் ஷாவ்மீ 16 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மொபைல் போட்டோகிராஃபி (Mobile Photography) விரும்பிகளுக்கான ஒரு தவிர்க்க முடியாத தேர்வாகவும் இருக்கும்.
நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) ஸ்மார்ட்போன் ஆனது யூஎஸ்பி டைப்-சி கேமரா ஹேண்டில், 2,000mAh பேட்டரி மற்றும் பிரிக்கக்கூடிய ஷட்டர் பட்டன் கொண்ட ஷாவ்மீ 15 அல்ட்ரா போட்டோகிராஃபி கிட் லெஜெண்ட் எடிஷன் (Photography Kit Legend Edition) உடன் அறிமுகமானது. இந்த கிட்டின் விலை ரூ. 11,999 ஆகும். இந்தியாவில் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்படடது.

ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Xiaomi 15 Ultra Specifications and Features) :
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் WQHD+ LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓ அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0)
- லைக்கா டியூன் செய்யப்பட்ட குவாட் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் ப்ரைமரி LYT-900 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- OIS மற்றும் 3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா
- OIS மற்றும் 4.3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் ISOCELL HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
- 90W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5410mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்


Click it and Unblock the Notifications