4ஜிபி ரேம் கொண்ட எஸ்ஆர்டி.ஃபோனை வெறும் ரூ.7,500க்கு அளிக்கிறது ஸ்மார்ட்ரான்.

|

உள்நாட்டில் உருவான ஃபோன் தயாரிப்பாளரான ஸ்மார்ட்ரான் நிறுவனம், இந்திய சந்தைக்கு ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. டி.ஃபோன் பி என்று பெயரிடப்பட்டுள்ள இதன் விலை ரூ.9 ஆயிரத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது.

4ஜிபி ரேம் கொண்ட எஸ்ஆர்டி.ஃபோனை வெறும் ரூ.7,500க்கு அளிக்கிறது ஸ்மார

இந்த ஃபோனின் அறிமுகத்திற்கு முன், இந்நிறுவனத்தின் எஸ்ஆர்டி.ஃபோனுக்கு ஒரு பெரிய அளவிலான தள்ளுபடியை அளிக்க முடிவு செய்துள்ளது. 4ஜிபி ராம் மற்றும் 32ஜிபி உள்ளக நினைவகத்தை கொண்டு ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன், இப்போது ரூ.7,500 விலையில் அளிக்கப்படுகிறது.

இந்த ஃபோன் அறிமுகம் செய்யப்பட்ட போது, ரூ.12,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதற்கு உயர்ந்த ரகத்தில், ராம் அளவு அப்படியே இருந்தாலும், உள்ளக நினைவகம் 64ஜிபி காணப்பட்டது. இந்த வகைக்கு மேற்கூறியது போன்ற எந்த தள்ளுபடியும் அளிக்கப்படவில்லை.

சிஇஎஸ் 2018 : அசத்தலான சாம்சங் தி வால், 8 கே டிவி, நோட்புக் 7 ஸ்பின் அறிமுகம்.!சிஇஎஸ் 2018 : அசத்தலான சாம்சங் தி வால், 8 கே டிவி, நோட்புக் 7 ஸ்பின் அறிமுகம்.!

கடந்த 2017 மே மாதம் ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி.போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கைப்பேசி, ஒரு மேன்மையான வடிவமைப்பு மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்களைத் தாங்கி வருகிறது. 5.5 இன்ச் திரையைக் கொண்டு, 1920X1080 பிக்சல் உள்ள ஒரு எஃப்ஹெச்டி பகுப்பாய்வை அளிக்கிறது.

இந்த ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி.ஃபோனின் உட்புறத்தை பார்த்தால், ஒரு குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 செயலி கொண்டு, அதனுடன் 4ஜிபி ராம் மற்றும் அட்ரினோ 510 கிராஃபிக்ஸ் யூனிட்டைப் பெற்று இயங்குகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்த ஃபோனில் 32ஜிபி மற்றும் 64ஜிபி என்ற இரு வேறு உள்ளக நினைவகத்தின் அடிப்படையில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. இதில் ட்ரான்எக்ஸ் தளத்தின் மூலம் அளவில்லாத கொள்ளளவு அளிக்கப்பட்டிருப்பதை இங்கு கட்டாயம் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

பிரத்யேகமானது: ஜனவரி மாதத்தில் 4 தயாரிப்புகளை அறிமுகம் செய்ய தயாராகிறது ஸ்மாட்ரான்

மென்பொருளைப் பொறுத்த வரை, யாரும் அறிந்த ஆண்ட்ராய்டு 7.1.1 நெளகட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குவதால், இந்த ஸ்மார்ட்போன் 30% வேகமான செயல்பாட்டை அளிக்கும் உத்திரவாதத்தை அளிக்கிறது. விரைவான பாதுகாப்பு வழிகளின் மூலம் இந்த ஓஎஸ், ஒரு உள்ளூர் ஆண்ட்ராய்டு ஃபோன்களின் அனுபவத்தை அளிக்கும் வகையில் உகந்ததாக இருக்கும் என்று அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி.ஃபோனில் உள்ள கேமரா திறன்களைக் குறித்து பார்த்தால், பின்புறத்தில் எப்/2.0 துளைக் கொண்ட ஒரு 13எம்பி முதன்மை கேமரா உடன் எல்இடி பிளாஷை பெற்றுள்ளது. முன்புறத்தில் விரிந்த கோணத்தில் அமைந்த ஆடிகளுடன் கூடிய ஒரு 5எம்பி செல்பீ கேமரா காணப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் விளக்குகளை எரிய செய்யும் வகையில் ஒரு 3,000எம்ஏஹெச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இதற்கு 2.0 தொழில்நுட்பத்தில் விரைவு சார்ஜ் செய்யும் வசதி அளிக்கப்படுகிறது. பின்பக்க கவர் திறக்கும் வகையில் இருப்பதால், பேட்டரியும் கழட்டி மாட்டி கொள்ளும் வண்ணம் உள்ளது.

இணைப்பு செயல்பாட்டைப் பொறுத்த வரை, 4ஜி வோல்டிஇ, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்ற இணைப்புத் தேர்வுகளை இந்த ஃபோன் கொண்டுள்ளது. ஒரு இரட்டை சிம் போடும் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், சார்ஜிங் செய்ய ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் பெற்றுள்ளது.

வடிவமைப்பு சிறப்பாக அமைந்தாலும், இந்த ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி.ஃபோன் சந்தையில் ஈர்ப்பை ஏற்படுத்த தவறிவிட்டது. இதில் போலிகார்பனேட் கட்டமைப்பு காணப்படுவதால், குறைந்த எடையை மட்டுமே கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
At the time of the launch, the 32GB variant of the Smartron srt.phone was priced at Rs. 12,999.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X