டக்குனு சார்ஜ் ஆகிவிடும் ஸ்மார்ட்போன்கள்
க்விக் சார்ஜிங் தொழில்நுட்பம் பல நிறுவனங்களும் வழங்க துவங்கி இருக்கின்றது. க்விக் சார்ஜ் 1.0 தொழில்நுட்பத்தினை முதன் முதலில் குவால்காம் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. முதல் தலைமுறை தொழில்நுட்பம் சாதாரண சார்ஜிங் நேரத்தை விட 40% வரை வேகமாக சார்ஜ் செய்யும் படி வடிவமைக்கப்பட்டது. இம்மாதிரியான ஸ்மார்ட்போன்கள் 2012 ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருக்கின்றன.
அதன் தொடர்ச்சியாக குவால்காம் நிறுவனம் க்விக் சார்ஜ் 2.0 தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இங்கு க்விக் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மாரப்ட்போன்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

சாம்சங் கேலக்ஸி எஸ்6
கேலக்ஸி எஸ்6 ஃபாஸ்ட் அடாப்டிவ் தொழில்நுட்பம் 'Fast Adaptive Charge' எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதோடு பேட்டரி முழுமையாக தீர்ந்த பின்பும் சரியாக 1 மணி நேரம் மற்றும் 18 நிமிடங்களில் முழு சார்ஜ் செய்கின்றது.

ஒப்போ ஃபைன்டு 7ஏ
ஒப்போ நிறுவனம் இந்த கருவியில் VOOC எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதோடு சுமார் 30 நிமிடங்களில் 75% வரை சார்ஜ் செய்கின்றது. முழுமையாக சார்ஜ் செய்ய 1 மணி நேரம் மற்றும் 22 நிமிடங்கள் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 4
சாம்சங் நிறுவனத்தின் ஃபாஸ்ட் அடாப்டிவ் தொழில்நுட்பம் 'Fast Adaptive Charge' எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதோடு 100% சார்ஜ் செய்ய 1 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களை எடுத்து கொள்கின்றது.

கூகுள் நெக்சஸ் 6
மோட்டோரோலா டர்போ சார்ஜர் மூலம் 3220 எம்ஏஎஹ் பேட்டரியை சுமார் 1 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்கின்றது.

ஹெச்டிசி ஒன் எம்9
க்விக் சார்ஜ் 2.0 கொண்டு 2840 எம்ஏஎஹ் பேட்டரியை முழுமையாக் சார்ஜ் செய்ய 1 மணி நேரம் மற்றும் 46 நிமிடங்களை எடுத்து கொள்கின்றது.

எல்ஜி ஜி3
எல்ஜி ஜி3யின் 3000 எம்ஏஎஹ் பேட்டரி இரண்டு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யப்படுகின்றது.

ஒன் ப்ளஸ் ஒன்
பார்க்க ஒப்போ ஃபைன்டு 7 போன்று காட்சியளித்தாலும் முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் எடுத்து கொள்கின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்5
கழற்ற முடியாத பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்5 முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் மற்றும் இரண்டு நிமிடங்களை எடுத்து கொள்கின்றது.

எல்ஜி ஜி4
க்விக் சார்ஜ் 2.0 கொண்டு எள்ஜி ஜி4 முழுமையாக சாரஜ் செய்ய 2 மணி நேரம் மற்றும் 7 நிமிடங்கள் ஆகின்றது.

சாம்சங் கேலக்ஸி நோட் 3
கேலக்ஸி நோட் 3 சார்ஜ் ஆக முழுமையாக 2 மணி நேரம் மற்றும் 15 நிமிடங்களை எடுத்து கொள்கின்றது.


Click it and Unblock the Notifications