ஸ்மார்ட்போன்களுக்கு மூடுவிழா, இனிமேல் செயற்கை நுண்ணறிவு தான்.!!

By Meganathan
|

இன்றைய ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரும் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது என ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தொலைதொடர்பு நிபுநர்கள் தெரிவிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது கருவிகளுடனான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள வழி செய்யும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாற்பது நாடுகளை சேர்ந்த சுமார் 1,00,000 பேர் கலந்து கொண்ட நேரமுக தேர்வின் அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையில் ஸ்மார்ட்போன்களின் தேவை முடிந்து விட்டது என்பதை உணர்த்தும் வகையில் பதில் அளித்துள்ளனர். மேலும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கும் பல தவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..

வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை

உலகளவில் மூன்றில் ஒருவர் ஆன்லைன் சார்ந்த போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்வதாக அறியப்பட்டுள்ளது. மேலும் ஐந்தில் நான்கு பேர் ஆன்லைன் மூலம் அதிகம் சேமித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஸ்ட்ரீமிங்

ஸ்ட்ரீமிங்

இளைஞர்கள் அதிகளவில் யூட்யூப் வீடியோ பார்க்கின்றனர். குறிப்பாக 16 முதல் 19 வயதுடைய சுமார் 46 சதவீதம் பேர் குறைந்தது ஒரு மணி நேரமாவது யூட்யூப் பயன்படுத்துவதாகவும் அறியப்பட்டுள்ளது.

விர்ச்சுவல்

விர்ச்சுவல்

தினசரி பயன்பாடுகளுக்கு விர்ச்சுவல் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். வீடியோ அழைப்பு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்ப்பதோடு சுமார் 44 சதவீதம் பேர் தங்களது சொந்த உணவினை அச்சிடவே விரும்புகின்றனர்.

ஸ்மார்ட் ஹோம்

ஸ்மார்ட் ஹோம்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீடு கட்ட பயன்படுத்தப்படும் செங்கல்களில் மின் கசிவு, கசிவு போன்றவைகளை கண்டறிய சென்சார்கள் பொருத்தப்படலாம் என 55 சதவீத ஸ்மார்ட்போன் பயனாளிகள் நம்புகின்றனர். இதை செயல்படுத்தும் துவக்கமாகவே ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பம் அமைந்திருக்கின்றது எனலாம்.

பயணிகள்

பயணிகள்

எதிர்காலத்தில் சிறிதளவு நேரத்தையும் வீணடிக்க விரும்பாதவர்கள் தனிப்பட்ட கணினி சேவைகள் கிடைத்தால் பயன்படுத்துவோம் என 86 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

தொடர்பு

தொடர்பு

சமூக வலைதளங்கள் ஆபத்து காலங்களில் தகவல்களை பரிமாறி கொள்ள அதிகம் பயன்படுத்தபடும் என கண்டறியப்பட்டுள்ளது. பத்தில் ஆறு பேர் ஆபத்து காலங்களில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

சென்சார்

சென்சார்

உடல் நலன் சார்ந்த தகவல்களை துல்லியமாக வழங்கும் தொழில்நுட்பம் அடுத்த வகை அணியும் கருவிகளாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வகை தொழில்நுட்பங்களை பயன்படுத்த பத்தில் எட்டு பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஹேக்கிங்

ஹேக்கிங்

பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனாளிகள் எதிர்காலத்திலும் ஹேக்கிங் மற்றும் வைரஸ் அச்சுறுத்தல்கள் இருக்கும் என்றே தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் ஆதிக்கம்

ஆன்லைன் ஆதிக்கம்

வாடிக்கையாளர்கள் அதிகளவிலான தகவல்களை ஆன்லைனில் பகிர்ந்து கொள்வதால் சமூகத்தில் இதன் பாதிப்பு அதிகமாகவே இருப்பதோடு இதன் தாக்கம் அதி பயங்கரமாக இருக்கும் என்றே ஐந்தில் மூவர் தெரிவித்துள்ளனர்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Read here in Tamil why Smartphones Will Be Dead In Five Years and also check what is going to overtake smartphones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X