Just In
- 10 hrs ago
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- 10 hrs ago
அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?
- 10 hrs ago
தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!
- 11 hrs ago
ஓஹோ! இப்படி செஞ்சா 12 மாதத்திற்கு YouTube Premium இலவசமா? இது தெரியாம போச்சே!
Don't Miss
- News
ராசியில்லாத ராஜா.. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து உருட்டி விட்ட கண்டச்சனி,அஷ்டம குரு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஹர்திக் நியமனம்
- Movies
அஜித் சார்.. டேட் கூட தெரியாதா?.. ரசிகருக்கு எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- Automobiles
ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?
- Finance
அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!
- Lifestyle
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த 10 தப்பான சார்ஜிங் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா? நிலைமை மோசமாவதற்குள் உடனே மாற்றுங்கள்..
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம் இது. ஒவ்வொரு மனிதனுக்கும் இடையில் எப்படி வெவ்வேறு விதமான பழக்க வழக்கங்கள் இருக்கிறதோ, அதேபோல், நாம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதிலும் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட பயன்பாட்டு பழக்க வழக்கங்கள் இருக்கிறது. குறிப்பாக, நாம் அனைவருக்கும் ஒரு தனிப்பட்ட சார்ஜிங் பழக்க வழக்கம் இருக்கிறது. அப்படி, சார்ஜிங் செய்யும் போது, நாம் செய்யும் தவறுகளைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

தவறான சார்ஜிங் பழக்கம் மோசமானதா?
உங்களுக்கு நீங்களே தெரியாமல் செய்யும் 10 தவறுகளைப் பற்றியும், அந்த தவறுகளை எப்படி நீங்கள் திருத்திக்கொண்டு, உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியின் ஆயுளைக் காப்பாற்ற முடியும் என்பதைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி பற்றிய புரிதலையும் இந்த பதிவு உங்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கக்கூடியது. குறிப்பாக நாம் இன்று பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் பேட்டரிகள் துல்லியமான எண்ணிக்கையிலான சார்ஜ் சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதனால், இந்த தவறுகளை நாம் தவிர்ப்பது மிகவும் முக்கியமானது.

நம்மில் பெரும்பாலானோர் செய்யும் மிகப் பெரிய தவறு இது தான்
பொதுவாக, நாம் செய்யும் மிகப் பெரிய தவறு என்ன தெரியுமா? நம்முடைய ஸ்மார்ட்போன் சார்ஜ் நீண்ட நேரம் நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவற்றை 100% வரை சார்ஜ் செய்து, அப்பாடா முழுவதுமாக சார்ஜ் ஏறிவிட்டது என்று நிம்மதி பெருமூச்சு விடுவோம். உங்கள் நிம்மதி பெருமூச்சைக் கொஞ்சம் இழுத்துப் பிடித்துக்கொள்ளுங்கள். 100% வரை சார்ஜ் செய்யும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறது என்றால், உங்களின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். இதற்கான காரணம் என்ன என்பதை இறுதியில் சொல்கிறோம். அதற்கு முன், நாம் திருத்திக்கொள்ள வேண்டிய 10 சார்ஜிங் தவறுகளைப் பற்றிப் பார்க்கலாம்.

1. பவர் சாக்கெட்டில் சார்ஜ்ர் தவறான பழக்கம்
உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜிங் செய்யப்படவில்லை என்றாலும் கூட சிலர் சார்ஜரை அப்படியே சாக்கெட்டில் விட்டுவிடுவீர்கள், இது தான் நீங்கள் செய்யும் பெரிய தவறே. சாக்கெட்டில் இருக்கும் சார்ஜர் தொடர்ந்து சக்தியை ஈர்க்கச் செய்கிறது. இதனால், உங்கள் மின்சார கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேவையின்றி மின்சாரத்தை ஈர்ப்பதோடு, சார்ஜ்ர் அதிக வெப்பமாகிறது. இந்த வெப்பம் மெதுவாக அதிகரித்து, அருகிலுள்ள எதையாவது தீ பிடிக்கச் செய்கிறது. அதிலும், காற்றில் ஈரப்பதம் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். இந்த பழக்கத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.

2. இரவு முழுக்க சார்ஜிங் செய்யும் பழக்கம்
உங்கள் ஸ்மார்ட்போனை இரவு முழுக்க சார்ஜ் செய்யும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அதை உடனே மாற்றிக்கொள்ளுங்கள். காரணம், தேவையான அளவைவிட உங்களுடைய பேட்டரி அதிக சார்ஜ்ஜை உறிஞ்சும், இது பேட்டரியின் சார்ஜிங் சுழற்சிகளைக் கெடுத்துவிடும். இதனால், பேட்டரி ஆயுள் குறைந்துவிடும். ஒரே இரவில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வது பேட்டரியில் அதிக வெப்பத்தை உருவாக்கும் என்பதை மறக்காதீர்கள்.
மனித நிர்வாண படங்களை விண்வெளிக்கு அனுப்புகிறதா NASA? ஏலியன் வேட்டைக்கான விபரீதம் துவங்கியதா?

3. சார்ஜிங்கில் இருக்கும் போனை பயன்படுத்தும் பழக்கம்
இருப்பதிலேயே மிகவும் மோசமான பழக்கங்களில் இதுவும் ஒன்று, நம்மில் பலர் செய்யக்கூடிய பொதுவான தவறும் இது தான். உங்கள் பேட்டரியை சார்ஜ் செய்யும் அதே நேரத்தில், அதை நீங்கள் பயன்படுத்தினால் மற்றொரு புறம் பேட்டரியின் சார்ஜ் ட்ரைன் அவுட் ஆகிறது. இதனால், ஒரே நேரத்தில் உங்களுடைய போனின் பேட்டரி இரண்டு வேலைகளைச் செய்கிறது. இது பேட்டரியை ஓவர் ஸ்ட்ரெஸ் ஆக்குகிறது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் தீ விபத்துக்கள் இதனால் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4. 20% மேல் இருக்கும்போது கூட சார்ஜ் செய்யும் பழக்கம்
உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ந்து சார்ஜ் செய்வது தவறானது. ஏனெனில், இது ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுளைக் குறைத்துவிடுகிறது. பேட்டரியைப் சரியான வழியில் பராமரிப்பதற்கான சிறந்த வழி, உண்மையிலேயே சார்ஜ் தேவைப்படும்போது மட்டும், நீங்கள் உங்கள் போனை சார்ஜ் செய்ய வேண்டும். சரியாகச் சொன்னால் 20% அல்லது அதற்கும் கீழ் இருக்கும் போது உங்கள் போனை சார்ஜ் செய்வது சிறப்பானது. ஆனால், 5% க்கு குறைவாக இருக்கும்போது சார்ஜ் செய்வது நல்ல பழக்கமல்ல என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

5. ஜீரோ சார்ஜ் அல்லது 0% வரை ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பழக்கம்
உங்கள் ஸ்மார்ட்போனை எப்பொழுதும் 0% என்ற அடிமட்ட அளவை எட்டவிடாதீர்கள். இது உங்களுடைய பேட்டரிக்கு மிகவும் மோசமானது. சார்ஜ் இல்லாமல் உங்களுடைய போன் இறந்தபின்பு நீங்கள் சார்ஜ் செய்தால், உங்களுடைய பேட்டரியின் சார்ஜிங் சுழற்சி பாதிக்கப்படுகிறது. நம்முடைய போனில் உள்ள லித்தியம் பேட்டரிகள் சார்ஜ் சுழற்சிகளின் கீழ் இயங்குகிறது. இதனால் வழக்கத்தை விட மிகவும் வேகமாக உங்களுடைய பேட்டரி ஆயுள் வீணாகிவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

6. 100% சார்ஜ் செய்யும் மோசமான பழக்கம்
உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை 100% வரை சார்ஜ் செய்தால், உடனே அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இது உங்கள் பேட்டரி ஆயுட்காலத்தைக் குறைந்துவிடும். ஏனெனில், ஒவ்வொரு பேட்டரியிலும் துல்லியமான சார்ஜிங் சுழற்சிகள் உள்ளது. நீங்கள் எப்போதும் 100 சதவீதத்திற்கு சார்ஜ் செய்தால், இந்த சுழற்சிகள் விரைவில் முடிவடைந்துவிடும். ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் பேட்டரியை 100% க்கு சார்ஜ் செய்துகொள்ளலாம். பொதுவாக எப்பொழுதும் 20% முதல் 80% வரை சார்ஜ் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்வது சிறப்பானது.

7. மொபைல் கேஸ் உடன் சார்ஜ் செய்யும் பழக்கம்
பேட்டரிகளின் முக்கிய எதிரிகளில் ஒன்று 'வெப்பம்'. அதிலும், ஸ்மார்ட்போனை நீங்கள் மொபைல் கேஸ் உடன் சார்ஜ் செய்யும் போது, அதிக வெப்பத்தை நீங்கள் போனுடன் சிக்க வைக்கிறீர்கள். இது ஸ்மார்ட்போனின் பேட்டரி மட்டுமின்றி பிற உள் கூறுகளையும் வெப்பமாக்குகிறது. இதனால், ஒட்டுமொத்த போனிற்கும் ஆபத்து நேரக்கூடும். உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதற்கு முன் மொபைல் கேஸை கழட்டிவிட்டு, பேட்டரியை "சுவாசிக்க"விடுங்கள்.

8. உங்கள் போனில் எந்த சார்ஜரை பயன்படுத்துகிறீர்கள்?
உங்கள் ஸ்மார்ட்போனிற்கு சொந்தமான, இணக்கமான சார்ஜரை மட்டும் பயன்படுத்துங்கள். வேறொரு பிராண்டில் அல்லது மற்றொரு மாதிரிக்குரிய சார்ஜரைப் பயன்படுத்தாதீர்கள். சரியான சார்ஜரை நீங்கள் பயன்படுத்தாவிட்டால் பேட்டரிக்கு அனுப்பப்படும் மின்சாரம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செல்லலாம். இது அதிக வெப்பமடைவதற்கும் மற்றும் ஸ்லொவ் சார்ஜிங்கிற்கும் வழிவகுக்கும். போனுடன் வரும் சார்ஜரை பயன்படுத்துங்கள், ஒருவேளை தொலைந்துவிட்டால் அதே மாடலை ஆர்டர் செய்து வாங்குங்கள்.

9. போலியான பேட்டரி ஆப்ஸ் பயன்படுத்தும் பழக்கம்
உங்கள் பேட்டரியின் செயல்திறனைக் கண்காணிக்க இலவச பயன்பாடுகள் உதவியாக இருக்கும். ஆனால், நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். அறியப்படாத மூலங்களால் உருவாக்கப்பட்ட மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களால் மதிப்பிடப்படாத பயன்பாடுகள் உங்கள் பேட்டரியை அழுத்தத்திற்கு உள்ளாக்கும். நீங்கள் பயன்படுத்தும் பயன்பாட்டின் ஆதாரம் மற்றும் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்கத் தவறாதீர்கள்.

10. லேப்டாப் மூலம் சார்ஜ் செய்யும் பழக்கம்
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் சிலருக்கு இந்த பழக்கம் இருக்க வாய்ப்புள்ளது. அப்படி சார்ஜ் செய்யும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், நிச்சயம் உங்கள் போன் லேப்டாப்பில் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதைக் கவனித்திருப்பீர்கள். இதற்கான காரணம், உங்கள் லேப்டாப் போர்ட் பேட்டரியின் ஃபாஸ்ட் சார்ஜ் விருப்பத்தைச் செயல்படுத்தாது. இது பெரிய தீங்கு இல்லை என்றாலும் கூட உங்களின் பொன்னான நேரம் தான் வீணாகும். இந்த சிறிய தவறுகளை எல்லாம் தவிர்த்தாலே உங்கள் போனின் ஆயுள் சிறப்பாக இருக்கும்.
செயற்கை பெண் உடல்களை சந்திரனுக்கு அனுப்பும் நாசா.. எதற்கு தெரியுமா? விஷயமே வேற பாஸ்..
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086