2023-ல் கம்மி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க முடியாதா? லேட் பண்ணாதீங்க! இனி இதுவும் காஸ்ட்லீ தான்

|

புது ஸ்மார்ட்போன் (Smartphone) அல்லது புதிய எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கத் திட்டமிட்டிருந்தால், முடிந்த வரை அவற்றை வேகமாக வாங்கிவிடுங்கள். ஏனென்றால், இந்த ஆண்டின் இறுதி அல்லது 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில், இவற்றின் விலை நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக கிடுகிடுவென்று உயரப்போகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, எலக்ட்ரானிக் டிவைஸ்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

2023 ஆம் ஆண்டில் விலை அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள்

2023 ஆம் ஆண்டில் விலை அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள்

இது அடுத்து வரும் ஆண்டிகளில் இன்னும் அதிகமாகப் போகிறது என்கிறது சமீபத்திய ஆய்வின் முடிவுகள். கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட விலை உயர்வை உன்னிப்பாகக் கவனித்திருந்தவர்களுக்கு நிச்சயமாக இதன் தாக்கம் என்ன என்பது தெரிந்திருக்கும். இதேபோல், மற்றொரு விலை உயர்வை வருகின்ற 2023 ஆம் ஆண்டில் நாம் எதிர்பார்க்கலாம் என்கிறது புதிய ஆய்வின் முடிவு. எதிர்பார்க்கப்படும் இந்த விலை ஏற்றத்திற்கான காரணம் குறித்தும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கை தகவல்

ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கை தகவல்

ப்ளூம்பெர்க் (Bloomberg) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, வரும் 2023 ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் சிப்களின் விலை மேலும் உயரப் போகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தைவான் செமிகண்டக்டர் கம்பெனி (TSMC) இன் ஒரு முக்கிய சப்ளையர் மற்றும் ஜப்பானிய கெமிக்கல் நிறுவனமான ஷோவா டென்கோ கே.கே., எலக்ட்ரானிக் சிப்களின் விலையை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, லாபமற்ற தயாரிப்புகளைக் குறைக்கவும் திட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது.

வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?

இந்த திடீர் விலை ஏற்றத்திற்கு என்ன காரணம்?

இந்த திடீர் விலை ஏற்றத்திற்கு என்ன காரணம்?

ஏற்கனவே, இதேபோல் 2022 ஆம் ஆண்டில் கூட பல விலை உயர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த விலை உயர்விற்கான முக்கிய காரணங்களாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போர் விவகாரங்கள் பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போர்களால் உருவாக்கப்பட்ட விநியோகச் சங்கிலி கோளாறு போன்ற பல விஷயங்கள், எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள் மற்றும் சிப்செட்களின் விலையை உயர்த்தவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களும் காஸ்ட்லீ ஆகிவிடும்

2023 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களும் காஸ்ட்லீ ஆகிவிடும்

சிப்களை உற்பத்தி செய்வதற்கான செலவு கணிசமாக உயர்ந்தால், அதே விகிதத்தில் தொடர்ந்து விற்பனை முடியாது என்ற ஒரு காரணமும் கூறப்படுகிறது. அப்படி அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்தால் TSMC இன் லாபம் முற்றிலுமாக கம்மியாகிவிடும். இதனால், 2023 ஆம் ஆண்டில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் சிப்களின் விலையை இந்நிறுவனம் உயர்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிப்களை உற்பத்தி செய்யும் சந்தையில் மிகச் குறைந்த நிறுவனங்கள் மட்டுமே இருப்பதனாலும் இது நிகழ்கிறது.

ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? அப்போ உங்கள் கைல ரூ. 3,042 இருந்தா போதும்! Samsung-ன் புது ஆஃபர்!ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? அப்போ உங்கள் கைல ரூ. 3,042 இருந்தா போதும்! Samsung-ன் புது ஆஃபர்!

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்களை உள்நாட்டில் நிறுவனம் துவங்க அழைப்புவிடுக்கும் இந்தியா

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்களை உள்நாட்டில் நிறுவனம் துவங்க அழைப்புவிடுக்கும் இந்தியா

இந்த காரணங்களால், வரும் 2023 ஆம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய பெரிய விலை உயர்வு அமல்படுத்தப்படும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தற்போது செமிகண்டெக்டர் உற்பத்தியாளர்களை உள்ளூர் சந்தைக்கு அழைப்பதற்கான உள்கட்டமைப்பை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. PLI (Production Linked Incentive) திட்டம் டிவி உற்பத்தியாளர், செமிகண்டெக்டர் உற்பத்தியாளர், டிஸ்பிளே உற்பத்தியாளர், ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்களை உள்நாட்டில் நிறுவனம் துவங்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

சாம்சங் கூட விலையை அதிகரிக்க போகிறதா?

சாம்சங் கூட விலையை அதிகரிக்க போகிறதா?

இந்தியாவில் உருவாக்கப்படும் தடையற்ற ஸ்மார்ட்போன் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்புக்கு இந்த திட்டம் உதவும் என்று கூறப்படுகிறது. சாம்சங் மற்றும் TSMC ஆகியவை ஏற்கனவே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிப்களின் விலையை உயர்த்த உத்தேசித்துள்ளதாக அந்த அறிக்கை தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிப்செட் விலை அதிகரிப்பு இறுதியில் நுகர்வோர்களைக் கட்டாயம் பாதிக்கும், ஏனெனில் அவர்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு பொருட்களுக்கு அதிக கட்டணம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கும்.

புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. Asus ROG Phone 6 நாளை வருது!புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. Asus ROG Phone 6 நாளை வருது!

வரவிருக்கும் விலை அதிகரிப்பு எவ்வளவு அதிகமாக இருக்கும்?

வரவிருக்கும் விலை அதிகரிப்பு எவ்வளவு அதிகமாக இருக்கும்?

நுகர்வோர் மின்னணு உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் உள்ள விலையுயர்ந்த சிப்செட்டுகளின் விலையை இன்னும் கட்டுக்குள் வைத்திருக்க நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளின் பிற தர அம்சங்களைக் குறைத்துள்ளது என்பதும் இதில் கவனிக்கத்தக்கது. இதை எல்லாம் வைத்துப் பார்க்கையில், அடுத்த முறை வரவிருக்கும் விலை உயர்வு எவ்வளவு பெரிய உயர்வாக இருக்கப்போகிறது என்பதை ஒரு மேலோட்டமாக நம்மால் யூகிக்க முடிகிறது.

புதிதாக ஸ்மார்ட்போன் அல்லது எலக்ட்ரானிக்ஸ் சாதனம் வாங்க திட்டமிருக்கா?

புதிதாக ஸ்மார்ட்போன் அல்லது எலக்ட்ரானிக்ஸ் சாதனம் வாங்க திட்டமிருக்கா?

ஒரு வேலை உங்களுக்குப் புதிதாக ஸ்மார்ட்போன் அல்லது எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் எதுவும் வாங்க வேண்டும் என்ற திட்டமிருந்தால், அதை முடிந்த வரை வேகமாகத் திட்டமிட்டு வாங்கிக்கொள்ளுங்கள். இல்லையென்றால், வரவிருக்கும் விலையேற்றத்திற்குப் பிறகு நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனையோ அல்லது எலெக்ட்ரானிக் டிவைஸ்களை வாங்க நினைத்தால், கட்டாயமாக அதிக கட்டணம் செலுத்தித் தான் நீங்கள் அவற்றை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆகையால், உங்கள் பர்சேஸிங் திட்டங்களை வேகமாக நகர்த்துங்கள்.

Best Mobiles in India

English summary
Smartphones To Get Further More Expensive In 2023 Because Of Chips and Other Components Rate Rise

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X