கின்னஸ் சாதனை படைத்த ஸ்மார்ட்போன்கள்
எங்கிருந்து தான் யோசிப்பார்களோ தெரியவில்லை, திடீரென கின்னஸ் சாதனை புரிந்து விடுகின்றனர். என்று நினைக்க தூண்டும் வகையில் இந்த ஸ்மார்ட்போன்கள் அமைந்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்த தலைசிறந்த நிறுவனங்களும் அவை தயாரித்த கருவிகளின் பட்டியலையும் கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

எல்ஜி ஜி4
மெக்சிக்கோ நகரில் சுமார் 2500 பேரை குவித்து எல்ஜி நிறுவனம் சுமார் 2 மணி நேரத்தில் 746 செல்பீக்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்தது. எல்ஜி ஜி4 கருவியின் மூலம் ஒவ்வொரு பத்து நொடிக்கும் ஒரு செல்பீ வீதம் எடுத்து சாதனை புரிந்தது.

ஜியோனி ஈலைஃப் எஸ்5.1
ஜியோனி நிறுவனம் 5.1 எம்எம் தட்டையாக இருக்கும் ஈவைஃப் எஸ்5.1 கருவியை தயாரித்து உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்று கின்னஸ் சாதனை படைத்தது.

ஓப்போ ஆர்5
ஜியோனி நிறுவனத்தின் சாதனையை முறியடித்து ஓப்போ நிறுவனம் 4.85 எம்எம் தட்டையாக இருக்கும் ஆர்5 கருவியை தயாரித்து கின்னஸில் இடம் பிடித்தது.

எச்டிசி ஒன்
உலகின் பெரிய அனிமேஷன் மொபைல் தயாரித்து எச்டிசி நிறுவனம் கின்னஸ் சாதனை படைத்தது.

எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ்
2011 ஆம் ஆண்டு டூயல் கோர் பிராசஸர் கொண்ட கருவியை தயாரித்து எல்ஜி நிறுவனம் சாதனை புரிந்தது.


Click it and Unblock the Notifications