காலம் கடந்து வெற்றி நடை போடும் 'நோக்கியா 1100'.!!
'நோக்கியா' இது ஒரு தொழில்நுட்ப நிறுவனம் என்பதையும் தாண்டி மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்தது என்றே கூற வேண்டும். மொபைல் போன் காலக்கட்டத்தின் துவக்கத்தில் பல்வேறு நிறுவனங்களின் ஆதிக்கம் சந்தையில் இருந்தாலும் நோக்கியா நிறுவனம் யாரும் தொட முடியாத உயரத்தில் இருந்தது என்றே கூற வேண்டும்.
அந்த வகையில் உலக பிரபலமான நோக்கியா நிறுவனத்தின் 1100 எனும் மொபைல் உலகளவில் பல சாதனைகளை புரிந்திருக்கின்றது. இன்றும் நோக்கியா 1100 மொபைல் போனினை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் கூறலாம்.

விலை
நோக்கியா 1100 வாங்க தனியாக பணத்தினை சேமிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எல்லோராலும் ஸ்மார்ட்போன்களை முழு பணம் கொடுத்து வாங்க முடிவதில்லை என்றே கூற வேண்டும்.

விலை
நோக்கியா 1100 தொலைந்து போனாலும் கவலை பட வேண்டியதில்லை, விலை குறைவாக இருப்பதால் மீண்டும் வாங்கி கொள்ளலாம். கொல்லை விலை கொண்ட ஸ்மார்ட்போனை இப்படி அடிக்கடி வாங்க முடியுமா.?

ஸ்கிரீன்
ஸ்மார்ட்போன் கீழே விழுந்தால் அதன் ஸ்கிரீன் உடைந்து போகும், இல்லாவிட்டால் குறைந்த பட்சம் கீறல் விழும். எப்படி பார்த்தாலும் கீறல் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை பயன்படுத்துவது கடினமே. ஆனால் நோக்கியா 1100 எத்தனை முறை கீழே விழுந்தாலும் எதுவும் ஆகாது.

எடை
நோக்கியா 1100 எடை குறைவாக இருந்தாலும் காயம் ஏற்படுத்தும் அளவு சிறந்ததாகவும் இருந்தது.

சார்ஜ்
ஆபத்து நேரங்களில் அழைப்புகளை மேற்கொள்ளும் போது ஸ்மார்ட்போனில் சார்ஜ் இல்லை என்றால் நிலைமை காலி. இதுவே நோக்கியா 1100 இருந்தால் அதையே ஆயுதமாக பயன்படுத்த முடியும்.

டார்ச்
அதிக பிரகாசமாக எரியும் டார்ச் லைட் என்றாலும் நோக்கியா 1100 அதிக சார்ஜ் எடுத்து கொள்ளாது.

பேட்டரி
நோக்கியா 1100 போனினை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக நாட்கள் பேக்கப் கிடைக்கும். இன்றைய ஸ்மார்ட்போன்களில் ஒரு நாள் முழுக்க சார்ஜ் கிடைக்கின்றதா என்பதை சற்றே யோசியுங்கள்.

கீ-பேடு
நோக்கியா 1100 கீ-பேடு பழகினால் ஸ்கிரீனை பார்க்காமலே டைப் செய்ய முடியும். திரையை பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது.

ஸ்பீடு டயல்
ஸ்பீடு டயல் ஆப்ஷன் மூலம் திரையை பார்க்காமல் மற்றவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடிந்தது.

ஹேங்
ஹேங் ஆகாத ஸ்மார்ட்போன்களே இல்லை என்று கூறும் அளவு இருக்கின்றன இன்றைய ஸ்மார்ட்போன்களின் நிலைமை. ஆனால் நோக்கியா 1100 ஹேங் ஆன சரித்திரமே கிடையாது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications








