ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999
கார்பன் நிறுவனம் டைட்டானியம் மேக் ஒன் ப்ளஸ் எனும் புதிய ஸ்மார்ட்போன் கருவியை ரூ.6,999க்கு வெளியிட்டது. மேலும் இந்த கருவி அனைத்து சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகர்களிடம் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் நீலம், கருப்பு, வெள்ளை மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் கீ கீபேட் இன்டெக்ரேஷன் கொண்ட முதல் கருவி என்ற பெருமையை கார்பன் நிறுவனத்தின் புதிய கருவி பெற்றுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 22 இந்திய மொழிகளில் குறுந்தகவல்களை அனுப்ப முடியும். மேலும் இந்த கருவியில் செய்கைகளை கண்டறியும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளதோடு சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்டாமினா மோடு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பார்க்கும் போது கார்பன் டைட்டானியம் மேக் ஒன் ப்ளஸ் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 இயங்குதளமும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

4.7 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த கருவியில் 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு அமேசான், ப்ளிப்கார்ட், ஹங்காமா மூவிஸ், ஓபேரா, ஓஎல்எக்ஸ் மற்றும் க்ளீன்மாஸ்டர் போன்ற செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications