320 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்

Posted By:

அமெரிக்காவில் நடைபெறும் வாடிக்கையாளர் மின்சாதன விழாவில் சேகஸ் Saygus என்ற நிறுவனம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும் விதத்தில் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சேகஸ் வி2 ஸ்மார்ட்போன் நீங்கள் கற்பனையிலும் எதிர்பார்க்காத மெமரியை கொடுத்துள்ளது. 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் 128 ஜிபி வரை பொருந்தும் இரு மெமரி கார்டு ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன, மொத்தமாக இந்த ஸ்மார்ட்போனில் சுமார் 320ஜிபி வரை அளிக்கப்பட்டுள்ளது.

320 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்

சேகஸ் சிறப்பம்சங்களை பொருத்தவரை 5 இன்ச் புல்எஹ்டி ரெசல்யூஷன் மற்றும் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் பிராசஸர், 3ஜிபி ராம் கொண்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 21 எம்பி மற்றும் 13 எம்பி கொடுக்கப்பட்டுள்ளதோடு 3100 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

மேலும் 60 ஜிகாஹெர்ட்ஸ் வைபை வசதி, கைரேகை ஸ்கேனர், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் என்எப்சி கொண்டுள்ளதோடு ஆன்டிராய்டு மூலம் இயங்குகின்றது.

English summary
Little-known brand Saygus announced a smartphone that will blow the competition out of the water with special some features which include a 320 GB internal memory.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot