Smartphone Tricks: டிஜிட்டல் யுகத்தில் உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்! இதை செய்தால் தப்பிக்கலாம்

|

சிறுக சிறுக வங்கியில் சேமித்து வைத்த வங்கித் தகவல் முதல் குடும்பப் புகைப்படங்கள், அரசு அடையாள ஆவணங்கள் என அனைத்தும் ஸ்மார்ட்போனில் தான் இருக்கிறது. கையில் வைத்திருக்கும் காசை போல் ஸ்மார்ட்போனை பாதுகாத்து வருகிறோம். ஆனால் ஸ்மார்ட்போனின் உள்ளிருக்கும் டேட்டாவுக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

எச்சரிக்கையோடு பயன்படுத்துவது மிக அவசியம்

எச்சரிக்கையோடு பயன்படுத்துவது மிக அவசியம்

ஸ்மார்ட்போனின் உள்ளிருக்கும் தகவல் திருட்டுப் போகிறது என்று நமக்கு தெரியாமலயே ஹேக்கர்கள் ஊடுருவி புகுந்து விளையாடுகிறார்கள்.

போலி ஆப்ஸ், மெசேஜ்கள் மூலம் லிங்க் அனுப்பி என பல வகையில் ஹேக்கர்கள் ஊடுருவுகிறார்கள். நமது தகவல் திருட்டுப்போகிறது என்று தெரியாமலயே நாமும் இருக்கிறோம்.

சார், பேங்க் இல் பேசுறோம் ஓடிபி நம்பர் சொல்லு என ஒரு கும்பல் கிழம்பியது. சர்வ சாதாரணமாக சிறுக சிறுக சேமித்த காசை திருடிவிடுகிறார்கள். ஸ்மார்ட்போனை எச்சரிக்கையோடு பயன்படுத்துவது என்பது மிக அவசியம்.

அதிகரிக்கும் தீங்கிழைக்கும் பயன்பாடுகள்

அதிகரிக்கும் தீங்கிழைக்கும் பயன்பாடுகள்

இணைய பயன்பாடு என்பது அதிகரிக்க அதிகரிக்க அதன் மீதான தீங்கிழைக்கும் செயல்களும் அதிகரித்து வருகின்றன. தரவுத் திருட்டுகள் ஹேக்கிங் என அனைத்து செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது என்பது மட்டுமே சிறந்த வழியாகும்.

ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஒரு சிறந்த வழி, ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இல்லாதபோதும் அது சூடாகவே இருக்கும். இதுதான் காரணம் என்று முழுமையாக கூறிவிட முடியாது இருப்பினும் இதுவும் ஒரு காரணமாகும்.

ஸ்மார்ட்போனை அவ்வப்போது ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்வது அவசியம். உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வழிகளில் இதுவும் ஒன்று.

பாதுகாப்பாக இருப்பது நம் கடமை

பாதுகாப்பாக இருப்பது நம் கடமை

உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படாமல் பாதுகாக்க சிறந்த வழிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இந்த வழிகளை நீங்கள் கற்றுக் கொள்வதோடு பிறருக்கும் சொல்லிக் கொடுத்து பாதுகாப்பாக இருக்க சொல்வது நம் கடமை ஆகும்.

அதிக பாஸ்வேர்ட் அவசியம்

அதிக பாஸ்வேர்ட் அவசியம்

இது மிகவும் அடிப்படையான விஷயம் ஆகும். பாஸ்வேர்ட்களை அதிகரிப்பது அவசியம். ஒரே பாஸ்வேர்ட் உடன் நிறுத்திவிடாமல் ஃபேஸ் அன்லாக், ஃபிங்கர் பிரிண்ட், பேட்டர்ன் என பல பாஸ்வேர்ட்களை உபயோகிப்பது அவசியம்.

அனைத்து முக்கிய பயன்பாட்டுக்கும் தனித்தனியாக லாக் போட்டு வைக்கவும். அதேபோல் ஒரே மாதிரியான பாஸ்வேர்ட் பயன்படுத்தாமல் வெவ்வேறு வகையான பாஸ்வேர்ட்களை உபயோகிப்பது அவசியம்.

VPN பயன்படுத்தலாம்

VPN பயன்படுத்தலாம்

பாதுகாப்பு இல்லாமல் பொது வைஃபை பயன்படுத்த வேண்டாம். விமான நிலையங்கள், கஃபேக்கள், ஹோட்டல்கள் என பொது இடங்களில் இலவச வைஃபை பயன்படுத்தும் போது அதிகாரப்பூர்வ விபிஎன்-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் இணைப்பை விபிஎன் பாதுகாக்கிறது.

அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்கள் அவசியம்

அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்கள் அவசியம்

நீங்கள் எந்த பயன்பாடுகளை பயன்படுத்தினாலும் அதை அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்வது அவசியம். கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டும் அதிகபட்சமாக பாதுகாப்பான பயன்பாடுகளை தான் கொண்டிருக்கிறது.

கூகுள் ப்ளே ஸ்டோரை பொறுத்தவரை முழுமையாக பாதுகாப்பு என்று கருதிவிட முடியாது. இருப்பினும் பிற பயன்பாடுகளுடன் ஒப்பிடுகையில் ப்ளே ஸ்டோர் பாதுகாப்பானதாகும்.

உங்கள் முக்கிய டேட்டாக்கள் திருட்டுப்போவதற்கு பிரதான காரணம் இதுபோன்ற மூன்றாம் தரப்பு செயலிகளை பிற பயன்பாடுகளில் இருந்து பதிவிறக்கம் செய்வது தான்.

உங்கள் பாஸ்வேர்ட், கிரெடிட் கார்ட் எண்கள் போன்ற பல தனிப்பட்ட தரவுகள் இதன்மூலமாக தான் திருட்டுப்போகிறது. எனவே கவனமாக பாதுகாப்பான தளங்களில் செயலிகளை பதிவிறக்கம் செய்யவும்.

காப்புப் பிரதி எடுப்பது அவசியம்

காப்புப் பிரதி எடுப்பது அவசியம்

உங்கள் மொபைலில் உள்ள தகவலையும் புகைப்படங்களையும் கூகுள் டிரைவ் போன்ற பயன்பாட்டில் சேமித்துக் கொள்ளவும். உங்கள் மொபைல் தொலைந்துவிட்டாலோ, திருடப்பட்டு விட்டாலோ தகவல் உங்களுடனே இருப்பதை இது உறுதி செய்கிறது.

அனைத்தும் போகிவிட்டதே என கையை விரித்து நிற்காமல் இப்படி செய்வதன் மூலம் அனைத்து பயன்பாடுகளையும் நீங்கள் உங்களது புது மொபைலில் கையாளலாம்.

தேவையில்லாத அணுகலை தொட வேண்டாம்

தேவையில்லாத அணுகலை தொட வேண்டாம்

எந்த சூழ்நிலையிலும் தேவையில்லாமல் வரும் பயன்பாட்டை அணுக வேண்டாம். உங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்தோ அல்லது தெரிந்த எண்ணில் இருந்தோ ஏதேனும் லிங்க் மெசேஜ் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம்.

இதை பகிர்ந்தால் பரிசு கிடைக்கும் என்று குறிப்பிட்டு ஏதேனும் மெசேஜ் வந்தால் அதை தொடவும் வேண்டாம் கிளிக் செய்யவும் வேண்டாம்.

அறியாத எண்ணில் இருந்து போன் அழைப்பு வந்தால் அதை எடுக்க வேண்டாம், அப்படி எடுக்கும் பட்சத்தில் அவர்கள் கேட்கும் எந்த தகவலையும் பகிர வேண்டாம்.

இதுவே பாதுகாப்பாக இருக்க வழிகள் என்று குறிப்பிட்டுவிட முடியாது. பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகளில் இதுவும் சில. ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக கையாண்டு இந்த டிஜிட்டல் யுகத்தில் பாதுகாப்பாக வாழ்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Smartphone Tricks: You Can Save Your Data and Money From these Hacks

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X