Home
News

உக்ரைன் ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட்போன்: இணையத்தில் வைரல்.!

சமீபத்தில் உக்ரைன்-ரஷ்யா இடையிலான 2-வது கட்ட போர் ஆரம்பமாகி உள்ளதாக உக்ரைன் அதிபரின் தலைமை அதிகாரி கூறியிருந்தார். குறிப்பாக கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தலைமை அதிகாரி Andriy Yermak கூறினார்.

குறிப்பாக உக்ரைன் ராணுவத்தை நம்புமாறும்

குறிப்பாக உக்ரைன் ராணுவத்தை நம்புமாறும் படை வலிமையுடன் இருப்பதாகவும், ரஷ்யப் படைகளின் தாக்குதல்களை தடுத்து உக்ரைன் படைகள்சமாளிக்கும் என்றும் நாட்டு மக்களுக்கு Andriy Yerma உறுதியளித்தார். மேலும் உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்றுவரும் இந்த சுழலில், ரஷ்ய வீரர் துப்பாக்கியால் சுட்டதில் உக்ரைன் ராணுவ வீரர் உருவரின் உயிரை ஸ்மார்ட்போன் காப்பாற்றிய நிகழ்வு நடந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 55-வது நாளா

அதாவது உக்ரைன் மீது ரஷ்யா 55-வது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. அதேபோல் உக்ரைன் ராணுவ வீரர்களும் ரஷ்ய வீரர்களை எதிர்த்து தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் ரஷ்ய படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் உக்ரைன் வீரர் தான் பையில் வைத்திருந்தஸ்மார்ட்போனால் உயிர் பிழைத்துள்ள அரிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அதுவும் சுமார் 7.2 மி.மீ அளவுள்ள துப்பாக்கி தோட்டா ஒன்று ஸ்மார்ட்போனில் பட்டு அதிலேயெ செருகி, வீரரின் உயிரை காப்பாற்றியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

 அந்த வீடியோவில், உடனிருக்கும் வீரரிடம்

குறிப்பாக அந்த வீடியோவில், உடனிருக்கும் வீரரிடம் தன்னுடைய பையில் இருந்த ஸ்மார்ட்போனை எடுத்து காண்பிப்பது போலவும், போனில் தோட்டா செருகி இருப்பது தெளிவாக இடம்பெற்றுள்ளது. மேலும் உயிர்துழைக்க வந்த அந்த தோட்டா, ஸ்மார்ட்போனால் தடுக்கப்பட்ட நிகழ்வால் உக்ரைன் வீரரின் உயிர் காப்பாற்றப்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஷ்ய படைகளின் தாக்குதலால் பாதிப்பிற்குள்ளான

மேலும் ரஷ்ய படைகளின் தாக்குதலால் பாதிப்பிற்குள்ளான உக்ரைனின் மரியுபோல் நகர மக்கள் குடிநீர் கூட இன்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக மரியுபோலின் பிரிமோர்ஸ்கி மாவட்டம் கடுமையான சேதத்தினை சந்தித்துள்ளது.

 முழுமையா

அதேபோல் ரஷியா மரியுபோலை கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றியதாக தெரிவித்திருந்த நிலையில, அதனை உக்ரைன் மறுத்திருந்தது. இதைதொடர்ந்து நகரை முழுமையாக கைப்பற்ற தீவிர நடவடிக்கையை ரஷியா எடுத்து வரும் நிலையில், அந்தப் பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட
எந்தவித வசதிகளுமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்கள் மீதும் ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

Best Mobiles in India

English summary
smartphone stopped the bullet and saved the life of this Ukrainian soldier: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X