வரும் ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும், நீங்க எப்ப வாங்க போறீங்க

By Meganathan
|

வரும் ஆண்டுகளில் உலக ஸ்மார்ட்போன் சந்தையின் வளர்ச்சி மற்றும் சந்தையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

[டிசெம்பர் ஸ்பெஷல், டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்]

ஐடிசி ஆராய்ச்சி அறிக்கையின் படி ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தாண்டு எதிர்பார்க்கப்பட்டதை விட 12.2 % அதிகரிக்கும் என்றும் 2015 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் யூனிட் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும்..

இந்த வளர்ச்சியானது 2018 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் 9.8% வரை கனிசமாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

[ரெட்மி நோட் செய்யும் இதை ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் செய்யாது]

இதன் காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலை 2014 ஆண்டில் $297 இல் இருந்து 2018 ஆம் ஆண்டில் $241 வரை குறையும் என்றும், இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் $135 இருந்து 2018 ஆம் ஆண்டில் $102 வரை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் சீன நிறுவனங்களின் தாக்கம் விலை குறைப்பிற்கு முக்கிய காரணமாக அமையும் என்று ஐடிசியின் மெலிஸ்ஸா சாவ் தெரிவித்தார்.

வரும் ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும்..

ப்ரீமியம் போன்களை பொருத்த வரை விலை குறைந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் வியக்கவைப்பதோடு அதன் விலை எந்தளவு குறையும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

[சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்]

ஐடிசி அறிக்கையின் படி கூகுளின் ஆன்டிராய்டு கருவிகள் உலக சந்தையில் 80% வரை ஆதிக்கம் செலுத்தும் என்றும் 61% வரை வருவாய் ஈட்டும் என்றும், ஆப்பிளின் ஐபோன்கள் 13% யூனிட்களை விற்பனை செய்து 34% வரை வருவாய் ஈட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும்..

சந்தையில் ஆன்டிராய்டு ஆதிக்கத்தால் டைசன் மற்றும் ஃபயர்பாக்ஸ் ஓஎஸ்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்றும் ஐடிசி தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Smartphone prices set to drop. The global smartphone market will see cooler growth and heavy competition will bring down prices for many consumers.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X