Home
News

உங்கள் போன் அடுப்பு போல சூடாகிறதா? அப்போ இதை உடனே செய்யணும்! இல்லைனா சிக்கல் பாஸ்!

அதிக வெப்பம் எப்படி மனிதர்களுக்கு நல்லதில்லையோ.. அதேபோல், அதிக வெப்பம் உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்பொன்னுக்கும் நல்லதில்லை மக்களே! ஆம், அதிக சூடும், குளிரும், நீரும் ஸ்மார்ட்போனுக்கு அறவே ஆகாது.

எந்த பருவகாலமாக இருந்தாலும் உங்கள் போன் சூடாவதை (phone over heating) அடிக்கடி உங்களால் உணர முடிகிறது என்றால், கட்டாயம் இந்த விஷயங்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் மக்களே.! உங்கள் ஸ்மார்ட்போன் அதிக வெப்பமாவதற்கு சில காரணங்கள் இருக்கிறது. அதை பற்றி அறிந்துகொண்டால், உங்கள் ஸ்மார்ட்போன் அடிக்கடி சூடாவதை உங்களால் தடுக்க முடியும்.

உங்கள் போன் அடுப்பு போல சூடாகிறதா? அப்போ இதை உடனே செய்யணும்!

உங்கள் போனிற்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். சரியாகச் சொன்னால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போன் அடிக்கடி ஓவர் ஹீட் (smartphone overheating problems) ஆவதை நம்மால் தடுக்க முடியும். ஸ்மார்ட்போன்கள் வெப்பம் ஆவதற்கு பல காரணங்கள் உள்ளது - சூரிய வெளிச்சத்திற்கு நேராக வைப்பது (direct sunlight); வெப்பமான இடத்தில் வைப்பது.

சரியான காற்றோட்டம் இல்லாத இடங்களில் வைப்பது போன்றவற்றால் இந்த சிக்கலை நீங்கள் சந்திக்க நேரிடலாம். நாள் முழுவதும் ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் கூட, உங்கள் போன் ஹீட்டிங் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். பேட்டரி அதிக நேரம் வேலை பார்த்தால் கூட உங்கள் போன் ஓவர் ஹீட் ஆகலாம். அதிக அளவில் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்தால், அவை பேக்ரவுண்டில் செயல்பட்டு போனை சூடேற்றலாம்.

உங்கள் போன் ஓவர் ஹீட் ஆக முதல் காரணம், ஓவர் சார்ஜிங் (over charging habit) பழக்கம் தான். அடிக்கடி சார்ஜிங் செய்வதும், நீண்ட நேரம் சார்ஜிங் செய்வதும், 100% நிறைந்த பிறகும் போனை சார்ஜிங்கில் அப்படியே வைப்பது ஆபத்தானது. இந்த பழக்கத்தை உடனே மாற்றுவது உங்கள் போனிற்கும், உங்களுக்கும் பாதுகாப்பானது. சூரிய வெளிச்சத்தில் போனை நேரடியாக வைப்பது உங்கள் போனை ஓவர் ஹீட் ஆவதற்குமற்றொரு காரணமாகும்.

சூரிய வெளிச்சத்தில் நேரடியாக போனை படாதவாறு பார்த்துக்கொள்வது உங்கள் சாமர்த்தியம். குறிப்பாக கார் கண்ணாடிக்கு அருகில் சூரிய ஒளி படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் மக்களே.! டிஸ்பிளே பிரைட்னஸ் (disple brightness) ஐ அதிகமாக வைத்தால், உங்கள் போன் விரைவில் சூடாகிவிடும். பேட்டரி கூடுதல் வேலை பார்க்க நேரிடும் காரணத்தினால் உங்கள் போன் சீக்கிரம் ஓவர்ஹீட் ஆகிவிடுகிறது.

விலை கம்மியா இருக்கிறது என்பதற்காக ஏதோ ஒரு சார்ஜர் ஹெட்டை (smartphone charger head) பயன்படுத்தக் கூடாது. உங்களது ஸ்மார்ட்போன் நிறுவனம் பரிந்துரை செய்த தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய அதிகாரப்பூர்வ சார்ஜரை மட்டுமே (branded phone chargers) பயன்படுத்த வேண்டும்.

அதிகப்படியான பேக்ரவுண்ட் ஆப்ஸ்-கள் (background mobile apps) செயல்பாட்டில் இருந்தால், உங்கள் போன் ஓவர் ஹீட் ஆகும் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள். எனவே, நீங்கள் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் ஆப்புகளை (smartphone apps) டர்ன் ஆப் செய்து கொள்வது நல்லது. அதேபோல், உங்கள் போனில் இருக்கும் ஆப்ஸ்களை அப்டேட்டில் (apps update) வைத்துக்கொள்வதும் முக்கியமானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Smartphone Overheating Issue and Reasons Behind It How To Solve This
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X