Just In
- 14 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 14 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 15 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 15 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
தினமும் வீட்டுக்கு போங்க.. எடப்பாடி போட்ட போடு.. டார்கெட் "80000".. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான்!
- Sports
ஏய் எப்புட்றா.. பிட்ச் தந்த ட்விஸ்ட்.. முதல் டி20ல் இந்தியா தோற்றது எப்படி??.. 3 முக்கிய காரணங்கள்!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஸ்மார்ட் போன் போதும்: தலைமை தேர்தல் அதிகாரி
தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தல் களைகட்ட தொடங்கிவிட்டது. தற்போதைய ஆளும் கட்சியான ஆம் ஆத்மி விஸ்வரூப வெற்றியை மீண்டும் பெறுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

டெல்லி தேர்தலில் யார் ஆட்சி
டெல்லியில் 1998 முதல் 2013-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால் 2015 தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியானது மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67ஐ கைப்பற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அப்போது பாஜகவுக்கு 3 இடங்கள்தான் கிடைத்தன.

டெல்லியில் பல்கலைக்கழகத்தில் போராட்டம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜனவரி 5-ம் தேதி நடந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விடுதிக் கட்டண உயர்வு, செமஸ்டர் கட்டண உயர்வுக்கு எதிராக ஜே.என்.யூ மாணவ அமைப்புத் தலைவர் ஆயிஷி கோஷ் தலைமையில் மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த நிலையில்தான், ஜனவரி 5-ம் தேதி மாலை முகமூடி அணிந்த மர்மக்கும்பல் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம்
டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் சிஏஏ-வுக்கு எதிராக நடத்திய போராட்டமும் கலவரமாக மாறியது. பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் 35 பேர் காயமடைந்தனர். மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிப்ரவரி 8-ல் டெல்லி சட்டசபை தேர்தல்
இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரையில் ஆளுங்கட்சியின் ஆட்சி காலம் முடிவடைந்த நிலையில், இதையடுத்து பிப்ரவரி 8-ல் டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 11-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘க்யூஆர்’ கோட்
வாக்குச்சாவடிக்கு வாக்காளர் சீட்டை (பூத் ஸ்லிப்) எடுத்துச் செல்ல மறந்து விட்டவர்களுக்கு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். அவர்களுக்காக ‘க்யூஆர்' கோட் வசதியை பயன்படுத்தி வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மொத்தம் உள்ள 11 மாவட்டங்களில் தலா ஒரு சட்டசபை தொகுதி வீதம் 11 தொகுதிகளில் இந்த வசதி அறிமுகம் ஆக உள்ளது.

ஸ்கேன் செய்துவிட்டு ஓட்டு போட அனுமதி
மேலே வழங்கப்பட்டுள்ள தகவின்படி, வாக்குச் சீட்டை எடுத்த செல்ல மறந்த வாக்காளர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால், வாக்காளர் உதவி மைய செயலியில் இருந்து ‘க்யூஆர்' கோட்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை ‘ஸ்கேன்' செய்துவிட்டு, ஓட்டு போட அனுமதி வழங்கப்படும். ஓட்டுப்பதிவு எந்திரம் உள்ள பகுதிக்கு சற்று தள்ளி ஸ்மார்ட்போனை வைத்து விட்டு ஓட்டு போட வேண்டும்.

டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங்
இதுகுறித்து, டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். அதில், டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஓட்டுப்போட தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 ஆகும்.

9 லட்சத்து 96 ஆயிரம் வாக்காளர்கள் அதிகரிப்பு
இவர்களில் ஆண் வாக்காளர்கள் 80 லட்சத்து 55 ஆயிரத்து 686 பேர். பெண் வாக்காளர்கள் 66 லட்சத்து 35 ஆயிரத்து 635 பேர். மூன்றாம் பாலினத்தவர் 815 பேர் ஆவர். கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுகையில், 9 லட்சத்து 96 ஆயிரம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தபால் ஓட்டு வசதி
இந்த வாக்குப்பதிவின் போது மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக 72 வாக்குச்சாவடிகளும், பதற்றமானவையாக 3 ஆயிரத்து 209 வாக்குச்சாவடிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. 80 வயதை தாண்டிய மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு அவர்களது வீட்டிலேயே தபால் ஓட்டு வசதி அளிக்கப்பட உள்ளது. என இந்த தகவல்களையும் டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்தார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470