போன் மூலம் செயல்படும் "ப்ளுடூத் கழிவறை"

Posted By: Staff
போன் மூலம் செயல்படும்

நாம் எல்லோரும் மொபைல் போன்களை குளியலறை மற்றும் கழிவறைக்குள் எடுத்துச்செல்ல பயப்படுவதுண்டு. ஏனெனில் நீரில் விழுந்துவிடுமோ என்ற பயம்தான். இந்த கவலை இனிவேண்டாம். புதிதாக ஐநேக்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும் சாடிஸ் என்ற புதுவகை கழிவறையை ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் மூலமாக எளிதில் கையாள முடியும்.

போன் மூலம் செயல்படும்

இந்த கழிவறையை உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளுடூத் என்ற வசதிகொண்டு கட்டுப்படுத்தலாம். உங்கள் காலை கடன்களை செய்யும்பொழுதே பாடல்களை ஒலிக்கச்செய்யலாம். இந்த வகை கழிவறைகளில் ஒலிப்பெருக்கியும் இருப்பது தனிச்சிறப்பு.

போன் மூலம் செயல்படும்

இது வரும் பிப்ரவரி மாதம் முதல் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் விலை சுமார் ரூ.2.5 லட்சங்கள்.

போன் மூலம் செயல்படும்

ஐஓஸ்ஸில் செயல்படும் வகையிலும் உருவாக்கி வருகிறார்களாம்.
 

வேடிக்கையான ஃபேஸ்புக் “டைம்லைன்” படங்கள் [இதைப்பாருங்க]

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்