உஷார்! சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திடீரென தீப்பிடித்து.! நடந்தது இதுதான்.!
இந்தியாவில் பல முன்னணி சீன நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக இந்த சீன நிறுவனங்கள் ஒரு சில போன்களை சற்று கம்மி விலையில் அறிமுகம் செய்வதால் அவற்றை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் ரெட்மி நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை கூட சற்று கம்மி விலையில் தான் அறிமுகம் செய்கிறது. இந்நிலையில் ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் தான் தீப்பிடித்து எரிந்துள்ளது. சரி இப்போது நடந்தது என்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

fonearena இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த பிப்ரவரி மாதம் நவீன் தஹியா என்ற நபர் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி போனை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் நவீன் தனது உடலில் திடீரென வெப்பத்தை உணர்ந்து இருக்கிறார்.
உடனே சுதாரித்துக் கொண்ட நவீன், தனது பாக்கெட்டில் இருந்து ஸ்மார்ட்போனை எடுத்து தரையில் வைத்திருக்கிறார். குறிப்பாக அந்த சமயத்தில் ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிவதைப் பார்த்து நவீன் அதிர்ச்சி அடைந்தார். குறிப்பாக ஸ்மார்ட்போன் சார்ஜரில் இணைக்கப்படாத நிலையிலும், தீப்பிடித்து எரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தீப்பிடித்து எரிந்த ஸ்மார்ட்போன் முழுமையாக சேதமடைந்துவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக நவீனுக்கோ அல்லது அருகில் இருந்தவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. பின்பு இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நவீன் ரெட்மி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்.
இருந்தபோதிலும் நிறுவனம் சார்பில் நவீனுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் ஸ்மார்ட்போன் எதனால் தீப்பிடித்து எரிந்தது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல் சமீபத்தில் கேரளாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலியான சம்பவம் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ (8 வயது சிறுமி) நேற்று இரவு 10.30 அளவில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மொபைல் போன் வெடித்துச் சிதறியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அந்த சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். பின்பு இந்த சிறுமியின் அம்மா கூட்டுறவு வங்கியின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதேபோல் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குழந்தைகளிடம் நீண்ட நேரம் போன் கொடுக்க வேண்டாம் என்று பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றர்


Click it and Unblock the Notifications