Xiaomi-யின் தந்திரம்! ரூ.80,000-க்கு Ultra எதுக்கு? கம்மி விலையில் Pro இருக்கு!

|

சியோமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக சியோமி 12எஸ் அல்ட்ரா, சியோமி 12எஸ் ப்ரோ மற்றும் சியோமி 12எஸ் (Xiaomi 12S Ultra, Xiaomi 12S Pro, Xiaomi 12S) நேற்று (அதாவது, ஜூலை 4 ஆம் தேதி) அறிமுகமாகின.

சியோமி 12S சீரீஸின் கீழ் வெளியாகியுள்ள இந்த மூன்று மாடல்களுமே கடந்த மே மாதம் அறிமுகமான Qualcomm-இன் Snapdragon 8+ Gen 1 SoC உடன் வருகின்றன என்பதும், இந்த ஸ்மார்ட்போன்கள் லைகா ஆப்டிக்ஸை (Leica Optics) பேக் செய்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

'அல்ட்ரா'  மீது பல கண்கள்; ஆனால் அது ரூ.80,000-ப்பா..?

'அல்ட்ரா' மீது பல கண்கள்; ஆனால் அது ரூ.80,000-ப்பா..?

என்னதான் 12எஸ் ப்ரோ மற்றும் வெண்ணிலா 12எஸ் மாடல்களானது நல்ல-நல்ல அம்சங்களை பேக் செய்தாலும் கூட, பலருக்கும் 'அல்ட்ரா' மாடல் மீதே ஃபோகஸ்!

நிச்சயமாக ஹை-எண்ட் மாடல், சீரிஸின் மற்ற மாடல்களை விட 'பெட்டர்' ஆகத்தான் இருக்கும்; ஆனால் விலையை கேட்டால் ஷாக் அடிக்கும்.

அதே மாதிரி.. ஆனால் குறைவான விலையில்!

அதே மாதிரி.. ஆனால் குறைவான விலையில்!

மறுகையில் உள்ள வெண்ணிலா மற்றும் ப்ரோ மாடல்கள், சீரிஸின் நன்மதிப்புகளை தக்கவைக்கும் அம்சங்களை பேக் செய்யும், அதே சமயம் விலை குறைவானதாகவும் இருக்கும்.

எனவே இக்கட்டுரையில் நாங்கள் ஃபோகஸ் செய்யப்போவது - சியோமி 12எஸ் மற்றும் 12எஸ் ப்ரோ மாடல்களை மட்டுமே!

Nothing Phone 1-இன் Nothing Phone 1-இன் "புதிய விலை" விவரம்; ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்!

Xiaomi 12S Pro-வில் அப்படி என்ன ஸ்பெஷல்?

Xiaomi 12S Pro-வில் அப்படி என்ன ஸ்பெஷல்?

கிட்டத்தட்ட எல்லாமே ஸ்பெஷல் தான். குறிப்பாக இதன் கேமரா செட்டப், ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் மிரட்டும்படி உள்ளது. தவிர டிஸ்பிளே, ப்ராசஸர், சார்ஜிங் போன்ற அம்சங்களிலும் "கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்!" என்கிற ஃபீலிங்கையே தருகிறது.

சியோமி 12எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.73-இன்ச் அளவிலான 2K (1,440x3,200 பிக்சல்கள்) கர்வ்டு AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இதில் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், DCI-P3 கலர் கேமட், டால்பி விஷன் மற்றும் HDR10+ சப்போர்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு போன்றவைகளும் அடக்கம்.

ரியர், ஃப்ரண்ட்னு.. மொத்த கேமரா செட்டப்பும் - தெறி!

ரியர், ஃப்ரண்ட்னு.. மொத்த கேமரா செட்டப்பும் - தெறி!

முன்னரே குறிப்பிட்டப்படி, இது Snapdragon 8+ Gen 1 SoC உடனான 12ஜிபி வரையிலான LPDDR5 ரேம்-ஐ பேக் செய்கிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் மெயின் கேமராவாக 50 மெகாபிக்சல் சோனி IMX707 சென்சார் (f/1.8) உள்ளது, சுவாரசியமாக இது OIS ஆதரவுடன் வருகிறது.

மீதமுள்ள இரண்டு கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடனான 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் உள்ளது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 32 மெகாபிக்சல் (f/2.4) செல்பீ கேமரா உள்ளது.

என்னடா இது? OnePlus-க்கு வந்த சோதனை! போயும் போயும் Realme தான் கிடைச்சுதா?என்னடா இது? OnePlus-க்கு வந்த சோதனை! போயும் போயும் Realme தான் கிடைச்சுதா?

போதும் போதும்னு ஸ்டோரேஜ்.. சட்டென்று சார்ஜிங்!

போதும் போதும்னு ஸ்டோரேஜ்.. சட்டென்று சார்ஜிங்!

சியோமி 12S ப்ரோ ஆனது 256GB வரையிலான UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் v5.2, IR பிளாஸ்டர், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

சார்ஜிங் டிபார்ட்மென்ட்-ஐ பொறுத்தவரை, இது 120W வயர்டு, 50W வயர்லெஸ் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,600mAh பேட்டரியை பேக் செய்கிறது.

என்ன விலை? எப்போது முதல் விற்பனை?

என்ன விலை? எப்போது முதல் விற்பனை?

Xiaomi 12S Pro ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.55,400 க்கும், இதன் 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட் ஆனது தோராயமாக ரூ.58,900 க்கும், 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் விருப்பமானது தோராயமாக ரூ.63,700 க்கும் மற்றும் டாப்-எண்ட் 12ஜிபி + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,500 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறுகையில் உள்ள Xiaomi 12S ஆனது 8ஜிபி + 128ஜிபி, 8ஜிபி + 256ஜிபி, 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512 ஜிபி என்கிற நான்கு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் முறையே ரூ.47,100, ரூ.50,700, ரூ.55,400 மற்றும் ரூ.61,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன்கள் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? எப்போது முதல் வாங்க கிடைக்கும்? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் நிச்சயம் வரும்; அதுமட்டும் உறுதி (இதே பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ)!

அப்போ சியோமி 12எஸ் மாடல் வேஸ்ட்-ஆ?

அப்போ சியோமி 12எஸ் மாடல் வேஸ்ட்-ஆ?

அப்படி பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது. அல்ட்ரா மற்றும் ப்ரோ மாடல்களை வாங்க முடியாதவர்கள் வெண்ணிலா மாடலை கருத்தில் கொள்ளலாம்.

இது 6.28-இன்ச் ஃபுல்-எச்டி+ டிஸ்ப்ளே ((1,080x2,400 பிக்சல்ஸ், 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், HDR10+ சப்போர்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்), ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி, 12ஜிபி வரையிலான LPDDR5 ரேம் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

7GB RAM, 50MP கேமரா.. இந்த கம்பெனி கிட்ட இருந்து இப்படி ஒரு பட்ஜெட் Phone-ஆ!7GB RAM, 50MP கேமரா.. இந்த கம்பெனி கிட்ட இருந்து இப்படி ஒரு பட்ஜெட் Phone-ஆ!

ப்ரோ மாடலில் உள்ள அதே கேமரா!

ப்ரோ மாடலில் உள்ள அதே கேமரா!

மேலும் இது 12எஸ் ப்ரோ மாடலில் உள்ள அதே மெயின் கேமராவுடன் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் மேக்ரோ ஷூட்டர் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

உடன் Xiaomi 12S ஆனது 67W வயர்டு, 50W வயர்லெஸ் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

Photo Courtesy: Xiaomi Website

Best Mobiles in India

English summary
Smartphone Buying Guide Latest Xiaomi 12S Pro is Almost Similar to 12S Ultra With Less Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X