Home
News

ஏர் இந்தியா விமானத்தின் உள்ளே ஸ்மார்ட்போன் வெடிப்பு.. பயணிகளுக்கு என்ன ஆனது? உண்மை என்ன?

உதய்பூரின் தபோக் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு pபுறப்பட ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒரு பயணியின் ஸ்மார்ட்போன், விமானத்திற்குள்ளேயே வெடித்ததாக கூறப்பட்டது. இதனால், விமான போக்குவரத்து தாமதமானதாக கூறப்படுகிறது. உண்மையில் நடந்தது என்ன? ஸ்மார்ட்போன் வெடிப்பால் ஆபத்து எதுவும் ஏற்பட்டதா?

விமானத்தில் பயணி ஒருவரின் ஸ்மார்ட்போன் வெடித்ததால் (smartphone blast), ஏர் இந்தியா விமானம் (Air India Flights) புறப்படுவதை நிறுத்தியதாக சமீபத்திய ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது உதய்பூரிலிருந்து டெல்லி (Delhi) செல்லும் விமானத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து எடுக்கவிருந்த நேரத்தில், உள்ளே இருந்த பயணியின் ஸ்மார்ட்போன் வெடித்துள்ளது.

ஏர் இந்தியா விமானத்தின் உள்ளே ஸ்மார்ட்போன் வெடிப்பு.. என்ன ஆனது?

இந்த சம்பவத்தினால், விமானத்தின் உள்ளே இருந்த பயணிகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டதா என்பது சரியாக தெரியவில்லை. ஆனால், ஸ்மார்ட்போன் (smartphone) வெடிப்பு நடந்ததாக கூறப்படும் நேரத்தில் இருந்து, ஒரு மணி நேரம் கழிந்த பிறகே விமானம் (flight) திரும்ப பறக்க தயாரானது என்று கூறப்பட்டுள்ளது. இந்த 1 மணி நேரத்தில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

உதய்பூரின் தபோக் விமான நிலையத்தில் (Udaipur's Dabok Airport) இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு தான் பயணி ஒருவரின் ஸ்மார்ட்போன் வெடித்ததாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. அது எந்த ஃபோன், எந்த பிராண்டில் (Brand) இருந்து வந்தது என்று எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மொத்தம் 140 பயணிகளுடன் இருந்த இந்த விமானத்தில், இந்த அசம்பாவிதத்தால் எந்த பயணிகளுக்கும் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. விமானி புறப்படுவதை நிறுத்திய பிறகு, சில பயணிகள் இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பிறகு, விமானம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தின் உள்ளே ஸ்மார்ட்போன் வெடிப்பு.. என்ன ஆனது?

தீவிரமான ஆய்வுக்கு பிறகு, ஒரு மணி நேரம் கழித்து விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளது. டெல்லி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், சந்திரசேகர் சர்தேசாய் என்ற ட்விட்டர் (Twitter) பயனர் தனது நண்பர் அதே விமானத்தில் இருந்ததாகக் கூறி, ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்படவே இல்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

விமானம் நின்றுகொண்டிருந்த போது வெடிப்பு நிகழ்ந்தது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்மார்ட்போன் வெடிப்பிற்கு பிறகு நடத்தப்பட்ட ஆய்விற்கு பிறகு, பயணிகளின் பாதுகாப்பு (Passenger Safety) தெளிவுபடுத்தப்பட்ட பின்னரே விமானம் புறப்பட்டதாக கூறப்படுகிறது. சிலர் இந்த சம்பவம் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த வேளையில் நடந்ததாக கூறியது பொய்யானப் புகார் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் வெடிப்புகள் என்பது இந்தியாவில் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. இந்த வெடிப்பிற்கு பின்னால் பொதுவாக தவறான பேட்டரிகள் (Mobile Battery) அல்லது மொபைலின் அதிக வெப்பமடைதல் (Mobile overheating issue) காரணமாக இருக்க கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில், வெடிப்பு சிறியதாக இருக்கும்.

சில நேரங்களில் வெடிப்பு பெரியதாக இருந்தால், அது சம்பந்தப்பட்ட நபருக்கு அபாயகரமான மற்றும் தீவிரமான தீக்காயங்களை ஏற்படுத்த கூடும். ஆனால், இங்கு விமானத்தில் நடந்த வெடிப்பு, அதிர்ஷ்டவசமாக பெரிய வெடிப்பாக இல்லாமல், சிறியதாக இருந்துள்ளதால், யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணிக்கும் பயணிகள் மறக்காமல் அவர்களின் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் கேட்ஜெட்களை (electronic gadgets) பிளைட் மோட் (Flight mode) அல்லது ஸ்விட்ச் ஆஃப் (switch off) செய்து வைப்பது பாதுகாப்பானது. இது உங்களுக்கு மட்டுமில்லை, உங்களுடன் பயணிக்கும் 100 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் பாதுகாப்பானது என்பதை மறக்க வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Smartphone Blast Inside Air India Flight In Delhi Bound Flight From Udaipur
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X