ரத்த அழுத்தத்தை போனில் கண்காணிக்கும் வசதி: புதிய சாதனம் கண்டுபிடிப்பு.!
தற்போது உள்ள புதிய புதிய தொழில்நுட்ப சாதனங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது சார்ந்த தகவலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
கிளிப்: theweek.in தகவலின்படி, ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்த கிளிப் 3டி அச்சடிப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம் என்று கூறப்படுகிறது. பின்பு ரத்த அழுத்தத்தை அளிவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட்போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் ரத்த அழுத்த அளவீட்டை காட்டும்.
மேலும் இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த புதிய தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு கண்டிப்பாகப் பயனளிக்கும். பின்பு ரத்த அழுத்தக் கண்காணிப்புக்கான தடையைக் குறைக்க மலிவான தீர்வை நாங்கள் உருவாக்கி உள்ளோம். குறிப்பாக இந்த புதிய சாதனம் மற்ற ரத்த அழுத்த கண்காணிப்பில் இருந்து வேறுபடுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் இருந்து கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர். குறிப்பாக இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.
6ஜி தொழில்நுட்பம்: அதேபோல் சமீபத்தில் சீன ஆராய்ச்சியாளர்கள் 6G வழியாக உலகின் முதல் அல்ட்ரா ஹை-ஸ்பீட் கம்யூனிகேஷன் தகவல்தொடர்பை கண்டுபிடித்துள்ளனர். இதுவரை இப்படி ஒரு அதிவேக இணைப்பை வேற எந்த உலக நாடுகளும் இன்னும் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சீனாவின் கரங்கள் இப்போது இதை கைப்பற்றிவிட்டது.
இப்போது பூமியில் பயன்படுத்தப்படும் அதிவேக நெட்வொர்க் அமைப்பாக 5ஜி திகழ்கிறது. சில நாடுகளில் 6ஜி துவங்கும் பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. இப்படி இருக்கும் தருணத்தில், யாரும் எதிர்பார்த்திடாத வகையில், சீனா ஒரு புதிய அசாதாரணமான விஷயத்தை செய்துள்ளது. சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து உலகின் மிகவும் வேகமான தகவல்தொடர்பை உருவாக்கியுள்ளனர்.
இது விரைவில் செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையிலான தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படுமாம். சீன ஆராய்ச்சியாளர்கள் குழு 6G தொழில்நுட்பத்தின் முதல் நிகழ்நேர வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் மூலம் அல்ட்ரா ஹை-ஸ்பீட் தகவல்தொடர்பு அம்சத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷனின், இரண்டாவது இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சிக் குழு டெராஹெர்ட்ஸ் ஆர்பிட்டல் ஆங்குலர் மொமெண்டம் கம்யூனிகேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
புதிய 6ஜி மொபைல் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பமானது தற்போதுள்ள 5ஜி சேவைகளை விட 10-20 மடங்கு வேகமானது என்று கூறப்படுகிறது. தெராஹெர்ட்ஸ் (Terahertz ) என்பது எலெக்ட்ரோமேக்னெட்டிக் ஸ்பெக்ட்ரத்தில் 100 GHz மற்றும் 10 THz வரையிலான அதிர்வெண் வரம்பைக் குறிக்கிறது என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
photo courtesy: medicalxpress.com


Click it and Unblock the Notifications








