2013ல் 1.2 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் விற்பனையாகும் - கார்ட்னர் அறிவிப்பு

Posted By: Karthikeyan
2013ல் 1.2 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் விற்பனையாகும் - கார்ட்னர் அறிவிப்பு

ஆய்வுகள் நடத்துவதில் முன்னனியில் இருக்கும் ஐடி நிறுவனமான கார்ட்னர் மொபைல் போன்களின் வளர்ச்சி மற்றும் அவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்து ஒரு புதிய முடிவைத் தெரிவித்திருக்கிறது.

அந்த ஆய்வின்படி இந்த ஆண்டு விற்பனையான சாதனங்களில் 70 சதவீத இடத்தை டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பெற்று இருக்கின்றன. வரும் காலங்களிலும் ஆன்ட்ராய்டு சாதனங்கள் வர்த்தக துறையில் முன்னிலையில் இருக்கும். அதோடு 2016 வரை 56 சதவீத டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் கூகுள் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் அடுத்து 3 ஆண்டுகளில் டேப்லெட்டுகளின் விற்பனை 3 மடங்கு அதிகரிக்கும் என்றும், 2016க்கு 53 மில்லியன் டேப்லெட்டுகள் உலக அளவில் விற்பனையாகும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

2016ல் விண்டோஸ் 8 டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டுக்கு அடுத்து 3வது இடத்தில் இருக்கும் என்று கார்ட்னர் தீர்க்கதரிசனம் கூறுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot