வச்சிட்டாங்க ஆப்பு! 2023 முதல் Samsung, Sony, LG உட்பட பல டிவிகளுக்கு தடை! என்ன காரணம்?

|

வருகிற 2023 ஆம் ஆண்டு முதல் சோனி, சாம்சங், டிசிஎல், எல்ஜி உட்பட பல பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளுக்கு (Smart TV) தடை விதிக்கப்பட போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தடைக்கு என்ன காரணம்? இதனால் எந்தெந்த டிவி மாடல்களுக்கு சிக்கல் ஏற்படும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

தடையை விட.. அதற்கான காரணம் ஷாக்கிங் ஆக உள்ளது!

தடையை விட.. அதற்கான காரணம் ஷாக்கிங் ஆக உள்ளது!

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஒரு தகவலின்படி, சோனி, சாம்சங், டிசிஎல், எல்ஜி மற்றும் பல பெரிய பிராண்டுகளின் கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ள / விற்பனை செய்யப்படும் பல டாப்-எண்ட் டிவிகள் தடை செய்யப்படலாம்!

"குறிப்பிட்ட" ஸ்மார்ட் டிவிகள் தடை செய்யப்படுகிறது என்கிற தகவலை விட, அவைகள் ஏன் தடை செய்யப்படுகின்றன என்கிற காரணம் இன்னும் ஷாக்கிங் ஆக இருக்கிறது!

ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!

அதென்ன காரணம்?

அதென்ன காரணம்?

பெரிய-பெரிய பிராண்டுகளின் டிவிகள் தடை செய்யப்படுவதற்கு பின்னணியில், அந்தந்த டிவி மாடல்களில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? பிரச்சனைகள் இருக்கிறதா? என்று கேட்டால்.. அதுதான் இல்லை!

"அந்த டிவிகள்" தடை செய்யப்பட காரணம் என்ன தெரியுமா? வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஆற்றல் மதிப்பீடுகள் (New energy ratings) தான்!

ஒரு மணி நேரத்திற்கு 141 வாட்ஸ்!

ஒரு மணி நேரத்திற்கு 141 வாட்ஸ்!

கடந்த மார்ச் 2021 இல், ஐரோப்பிய ஒன்றியமானது, ஸ்மார்ட் டிவிகளுக்கான அதன் எனர்ஜி லேபிளை (Energy Lable) மாற்றி அமைத்தது.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட அளவிலான டிஸ்பிளேவை கொண்ட ஒரு ஸ்மார்ட் டிவி ஆனது 1 மணி நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான வாட்ஸ்-ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது!

வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!

எடுத்துக்காட்டிற்கு!

எடுத்துக்காட்டிற்கு!

ஒரு 75-இன்ச் 8K டிவி ஆனது ஒரு மணி நேரத்திற்கு 141 வாட்ஸ் அல்லது அதற்கும் குறைவான எனர்ஜியை (வாட்ஸ்) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அதிரடி மாற்றத்தின் விளைவாக, ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்ட பல வகையான (சாம்சங், சோனி, எல்ஜி) ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆனது குறைந்த ஆற்றல் மதிப்பீட்டிற்கு (Lowest energy rating) மாற்றப்பட்டன!

இப்போது இந்த சட்டம் இன்னும் கடுமையாகிறது!

இப்போது இந்த சட்டம் இன்னும் கடுமையாகிறது!

ஐரோப்பாவில் - தற்போது வரையிலாக - OLED டிவிகள் ஆனது LCD டிவிகளை விட (LED, QLED, miniLED போன்றவை) சற்றே அதிக சக்தியை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் microLED மற்றும் அனைத்து வகையான 8கே டிவிகளும் அதிகபட்ச ஆற்றல் வரம்பிற்கு இணங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மார்ச் 1, 2023 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த விதிவிலக்குகள் அகற்றப்பட உள்ளதாகவும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வரம்புகளை மீறும் டிவி மாடல்கள் தடை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது!

Best Mobiles in India

English summary
Smart TV Models From Sony Samsung LG and more to ban starting from March 2023 why

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X