Just In
- 8 hrs ago
பட்ஜெட் விலையில் களமிறங்கும் மோட்டோரோலா Capri Plus ஸ்மார்ட்போன்.!
- 9 hrs ago
திரும்பிவர வாய்ப்பே இல்லை: டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளுக்கு இந்தியா நிரந்தர தடை!
- 9 hrs ago
50ஜிபி போனஸ் டேட்டா வழங்கிய வோடபோன் ஐடியா.! எந்த திட்டத்தில் தெரியுமா?
- 10 hrs ago
களமிறங்கிய FAUG விளையாட்டு: எப்படி பதிவிறக்கம் செய்து விளையாடுவது?- எளிய வழிமுறைகள்!
Don't Miss
- Movies
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- News
டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோல்கேட் ஸ்மார்ட் டூத்பிரஷ் : பல்லில் அழுக்கு இருந்தால் நீல நிறத்தில் ஒளிரும்!
பற்களில் உள்ள அழுக்கு படலத்தை கண்டறிந்து துடைத்தெறியும் திறன் கொண்ட ஸ்மார்ட் டூத் பிரஷ், சிஇஎஸ் 2020 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. லாஸ்வேகாஸில் நடைபெற்ற இந்த தொழில்நுட்ப கண்காட்சியில், வரவிருக்கும் ஆண்டிற்கான சில அற்புதமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய நிலையில், கோல்கேட்டின் 'பிளேக்லெஸ் புரோ'-ம் வெளியானது.

ப்ளூடூத்
இந்த ஸ்மார்ட் டூத்பிரஷை ப்ளூடூத் வழியாக ஸ்மார்ட்போனுடன் ஒத்திசைந்திருக்கும் நிலையில், பல்துலக்கும் போது அழுக்கு படலம் கண்டறியப்படும்போது நீல நிறத்திலும் , பின்னர் அதை துடைத்தெறிந்து சுத்தம் செய்தபின்பு வெண்மைநிறமாகவும் ஒளிரும்.

கோல்கேட் நிறுவனம்
தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இந்த டூத்பிரஷை வெளியிட்டதன் மூலம் கோல்கேட் நிறுவனம், ஸ்மார்ட் ஓரல் கேர் சந்தையில் ஏற்கனவே உள்ள ஏராளமான போட்டியாளர்களுடன் இணைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த துறையில் பெரும்பாலும் ஓரல்-பி நிறுவனம், அதன் செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் ஜீனியஸ் எக்ஸ் தயாரிப்பின் மூலம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பானது, வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பற்களை முழுவதுமாக துலக்குவதை உறுதி செய்யும் திறனை கொண்டுள்ளது.

உள் மற்றும் வெளிப்புறமாக மறுவடிவமைப்பு
அனைத்து பற்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வாயைச் சுற்றி முப்பரிமாண கண்காணிப்பை வழங்குவதற்காக, உள் மற்றும் வெளிப்புறமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்மார்ட் ப்ரஷான ஓரல்-பி ஐஓஎஸ்-ஐ இந்தாண்டு சிஈஎஸ் மாநாட்டில் வெளியானது.

ஓரல்-பி
ஓரல்-பி ஐஓ என்பது புதிய டூத் பிரஷ் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு , ஒரு உண்மையான உணர்ச்சிகரமான அனுபவத்துடன் கூடிய ஒரு புதுமையான பல் துலக்குதல் தொழில்நுட்பமாகும். இது பயனர்கள் உணர்ந்து, கேட்டு மற்றும் பார்த்து பற்களைத் துலக்கும் வகையில், அவர்கள் எப்போதும் செய்வதில் இருந்து வித்தியாசமானதாக மாற்றுகிறது '' என்று பி & ஜி வி.பி. குளோபல் ஹெல்த் கேர் ஆர் அண்ட் டி பிரிவைச் சேர்ந்த லிசா எர்ன்ஸ்ட் தெரிவிக்கிறார்.

100 சதவீத ஆரோக்கியமான ஈறுகளை அளித்தது
"முற்றிலும் உண்மையான பல்துலக்குதல் அனுபவத்தைக் கண்டறிய, பல் நிபுணர்களுடன் ஆறு வருடங்களாக அர்ப்பணிப்புடன் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ' என்கிறார் லிசா.
ஓரல்-பி தனது சொந்த மருத்துவ பரிசோதனைகளில், இந்த டூத்பிரஷ் வெறும் ஒரு வாரத்தில் 100 சதவீத ஆரோக்கியமான ஈறுகளை அளித்தது என்று கூறுகிறது. சாதாரண பிரஷ் மூலம் கையால் பல் துலக்குதலுடன் ஒப்பிடும்போது ஈறுகளில் ஆறு மடங்கு அதிகமான அழுக்கு படலங்கள் அகற்றப்படுவதாகவும் தெரிவிக்கிறது.
கோல்கேட் அதன் டூத்பிரஷில் உட்பொதிக்கப்பட்ட சென்சார் இருப்பதாகவும், அது ஒவ்வொரு பற்களுக்கும் பயோஃபிலிம் இருப்பதைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது.

தரவுகள் பயனரின் மொபைலில் உள்ள ஒரு செயலியில் சேமிக்கப்படுகிறது
அழுக்கு படலத்தை கண்டறியும் சென்சாரை தவிர, எங்கு அழுக்கு இல்லை மற்றும் எங்கு சுத்தம் செய்யப்படவில்லை என்பதை கண்டறியும் திறன் உள்பட ஓரல்-பி ஜீனியஸ்எக்ஸ் டூத்பிரஷ்-ல் உள்ள அனைத்து திறன்களும் இதிலும் ஒத்திருக்கின்றன.
இந்த தரவுகள் பயனரின் மொபைலில் உள்ள ஒரு செயலியில் சேமிக்கப்படுகிறது என்பதால், பயனர்கள் விரும்பினால் தங்களது வாயின் சுகாதாரத்தை மேம்படுத்த அதை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்யலாம்.

தயாரிப்பின் வெளியீட்டு தேதி
கோல்கேட் நிறுவனம் இந்த தயாரிப்பின் வெளியீட்டு தேதி மற்றும் விலை போன்ற தகவல்களை இன்னும் வெளியிடாத நிலையில், ஸ்மார்ட் டூத்பிரஷில் பொருத்தப்பட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் இந்நிறுவனத்தின் தற்போதைய எலக்ட்ரிக் பிரஷான E1-ன் விலையை விட அதிகமாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த E1 பிரஷ் சுமார் ரூ9000க்கு விற்பனையாகிறது.

இதன் விலை ரூ14000-ஐ தாண்டக்கூடும்
ஓரல்-பி மற்றும் சோனிகேர் வழங்கும் உயர் தர தயாரிப்புகளின் விலைக்கு நெருக்கமாக இருக்கும் என்று கோல்கேட் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இதன் விலை ரூ14000-ஐ தாண்டக்கூடும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190