மில்டனின் புதுமையான டிபன் பாக்ஸ்.! ஆப் மூலம் இயங்கும்.! விலை? முழுவிபரங்கள்.!
இப்போது வரும் சில பொருட்கள் ஸ்மார்ட் ஆக மாறுகின்றன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக புதிய புதிய தொழில்நுட்பங்கள் பல்வேறு சாதனங்களை மிகவும் பயனுள்ளதாக மாற்றுகிறது. மேலும் ஸ்மார்ட் சாதனங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது
என்றுதான் கூறவேண்டும்.

அதன்படி இந்த ஸ்மார்ட் தொழில்நுட்பம் டிபன் பாக்சில் வந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும், ஏனெனில் மில்டன் நிறுவனம் அதுபோன்ற பொருளை தான் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது அலுவலகம் செல்லும் ஒருவருக்கு மைக்ரோவேவ் உணவு படிக்காது என்றால் இந்த ஆப் மூலம் இயங்கும் ஸ்மார்ட் டிபன் பாக்ஸ் பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மில்டன் கொண்டுவந்துள்ள இந்த புதிய டிபன் பாக்ஸ் மாடல் ஆனது உங்கள் ஸ்மார்ட்போன் உடன் இணைக்க முடியும். பின்பு இதுஆப் மூலம் உங்கள் உணவு எவ்வளவு நேரம் சூடுபடுத்தப்பட வேண்டும் என்பதைத் திட்டமிட உங்களை அனுமதிக்கிறது.

மேலும் இதைக் கொண்டு 30நிமிடங்களுக்குள் உணவை சூடாக்கி 60 நிமிடங்களுக்கு சூடாக வைத்திருக்கும். எனவே நீங்கள் அதை சூடாகவும் ப்ரெஷாகவும் சாப்பிட முடியும். பின்பு நீங்கள் நீண்ட தூரம் வேலைக்கு செல்லும்போது. சரியாக ஒரு இடத்தை சென்றடைந்தவுடன் சாப்பிட திட்டமிட்டிருந்தால் Geolocation தேர்வு செய்து வைத்துக்கொள்ளலாம்.

மேலும் நீங்கள் சரியாக அந்த இடத்தைச் சென்றடையும் போது உணவு சூடாக உணவு சூடாக இருப்பதை உறுதி செய்வதற்கானதானாகவே வெப்பமூட்டும் செயல்முறையைத் துவங்கியிருக்கம். பின்பு நீங்கள் நீண்டதூர சுற்றுலாவிற்குச் செல்லும் போது கூடஇது மிகவும் உதவியாக இருக்கும்.

குறிப்பாக இது ஸ்மார்ட் டிபன் பாக்ஸ் என்பதால், வாய்ஸ் அசிஸ்டன்ட் உதவியுடன் வெளிவருகிறது. அதிலும் கூகுள் அசிஸ்டன்ட், அலெக்சா, சிரி ஆகியவற்றைப் பயன்படுத்தி அதைக் கட்டுப்படுத்தலாம்.

இந்த அட்டகாசமான டிபன் பாக்சின் விலை ரூ.2999-ஆக உள்ளது, குறிப்பாக சரியான விலையில் வெளிவந்துள்ளது என்றுதான்
கூறவேண்டும். பின்பு இது அனைத்து இடங்களில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த
சாதனத்ததை அமேசான் தளத்தில் வாங்க முடியம்.


Click it and Unblock the Notifications