Subscribe to Gizbot

கூகுள் விருது பெற்ற இளம் விஞ்ஞானிகள்..!!

Posted By:

இந்த காலத்து மாணவர்கள் எல்லாம் பிஞ்சிலியே பழுத்ததாக தான் இருக்குது. இன்றைய பெற்றோர்கள் குழந்தை பிறந்தவுடனே பாட்டு, நடனம், தற்காப்பு கலை என அனைத்து பயிற்சிகளுக்கும் அனுப்பி விடுகின்றனர்.

வெளியானது : பாதுகாக்கப்பட்ட கூகுள் 'ரகசியங்கள்'..!

அவர்கள் வளரும் போதே ஏதேனும் கலையை அறிந்தவர்களாக இருக்கவே பெற்றோர்கள் இவ்வாறு செய்கின்றனர். இதில் பெற்றோருடன் சேர்ந்து கூகுள் நிறுவனமும் தன் பங்கிற்கு குழந்தைகளை ஊக்குவிக்கும் முயற்சியில் பல திட்டங்களை நடத்தி வருகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூகுள் சயின்ஸ் ஃபேர்

கூகுள் சயின்ஸ் ஃபேர்

ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் கூகுள் சயின்ஸ் ஃபேர் எனும் அறிவியல் கண்காட்சியை நடத்தி வருகின்றது.

வயது

வயது

கூகுளின் அறிவியல் கண்காட்சியில் 13 முதல் 18 வயதுடைய குழந்தைகள் பங்கேற்று தங்களது கண்டுபிடிப்புகளை சமர்பிக்கலாம்.

தேர்வு

தேர்வு

குழந்தைகளின் படைப்புகளை ஆய்வு செய்து அதில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு கூகுள் நிறுவனம் பரிசுகளை வழங்குவதோடு அவர்களை ஊக்குவிக்கவும் செய்கின்றது.

ஆண்டு

ஆண்டு

இந்த ஆண்டு கூகுள் நிறுவனத்தின் ஐந்தாவது அறிவியல் கண்காட்சியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றே.

பட்டியல்

பட்டியல்

அந்த வகையில் இந்தாண்டு கூகுள் அறிவியல் கண்காட்சியல் வெற்றி பெற்ற படைப்புகள் மற்றும் அதனை உருவாக்கிய குழந்தைகளின் புகைப்படங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

லலிதா ப்ரசிதா ஸ்ரீபதா

லலிதா ப்ரசிதா ஸ்ரீபதா

குறைந்த செலவில் நீரினை சுத்தம் செய்ய சோளத்தை பயன்படுத்தும் புதிய திட்டத்தை கண்டறிந்தமைக்காக கூகுள் அறிவியல் கண்காட்சியில் இந்தியாவின் ஒடிஸ்ஸாவை சேர்ந்த 13 வயது சிறுமி விருது பெற்றுள்ளார்.

ஒலிவியா ஹலிசீ

ஒலிவியா ஹலிசீ

அமெரிக்காவை சேர்ந்த ஒலிவியா இந்தாண்டின் முதல் பரிசை வென்றுள்ளார். மிகவும் கொடுமையான எபோலா கிருமையை முப்பது நிமிடங்களில் கண்டறியும் முறையை இவர் கண்டறிந்துள்ளார்.

அனுருத் கனேசன்

அனுருத் கனேசன்

தடுப்பு மருந்துகள் வேகமாக பயணிக்க உதவும் ப்ரோடோடைப் கண்டறிந்தமைக்காக கனேசன் கூகுள் கண்காட்சியில் பரிசு பெற்றார். இவரது கண்டுபிடிப்பு லெகோ எட்யூகேஷன் பில்டர் விருது பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எலிட் சர்ரி

எலிட் சர்ரி

இங்கிலாந்தை சேர்ந்த எலியட் தான் தயாரித்த ரோபோட்டிற்காக இன்குபேட்டர் விருதை வென்றுள்ளார். இவரது ரோபோட் காய்கறி தோட்டத்தை கவனித்து கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரோபோட்டினை ஸ்மார்ட்போன் மூலம் இயக்க முடியும்.

கிரிஷ் குமார்

கிரிஷ் குமார்

சிங்கப்பூரை சேர்ந்த கிரிஷ் ரெவ்யுபி எனும் மென்பொருளை உருவாக்கி கூகுளிடம் இருந்து 25,000 டாலர் மற்றும் தனது செயலியை மேம்படுத்த கூகுளின் வழிகாட்டுதலையும் வென்றுள்ளார்.

கியாரா ஜட்ஜ், சோஃபி ஹீலி-தௌ மற்றும் எமெர் ஹிக்கி

கியாரா ஜட்ஜ், சோஃபி ஹீலி-தௌ மற்றும் எமெர் ஹிக்கி

உணவு சார்ந்த ஆய்வுகளில் ஒரு வருடம் ஈடுப்பட்டதன் விளைவு இந்த மூவருக்கும் கூகுள் அறிவியல் கண்காட்சியில் விருதை பெற்று தந்துள்ளது.

எரிக் சென்

எரிக் சென்

சென் கண்டறிந்திருக்கும் மென்பொருள் மற்றும் சில ஆய்வுகளில் இருந்து H5N1 மற்றும் H7N9 போன்ற வைரஸ்களை பரவ விடாமல் தடுக்கும், இந்த கண்டுபிடிப்புக்காக இவருக்கு இன்டெல் சயின்ஸ் டேலென்ட் சர்ச் விருது வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ப்ரிட்டானி வென்ஜர்

ப்ரிட்டானி வென்ஜர்

ப்ரிட்டானி வென்ஜர் உயிரியல் மற்றும் கணினி பாடங்களை இணைத்து மேற்கொண்ட ஆய்வில் மார்பக புற்று நோயினை மருத்துவர்கள் கண்டறிய புதிய செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார்.

ஷ்ரியா போஸ்

ஷ்ரியா போஸ்

புற்று நோய்க்கு வழங்கப்படும் கீமோதெரப்பி மருத்துவத்தை பயனற்றதாக்கும் ஒரு வகை புரதம் உடலில் இருப்பதை கண்டறிந்து அவைகளை தாண்டி கீமோதெரப்பீயை உடலில் செயல்பட வைக்கும் முறையை கண்டறிந்தமைக்காக ஷ்ரியா கூகுளின் அறிவியல் கண்காட்சியில் முதல் ஆடம்பர பரிசை வென்றிருக்கின்றார்.

கென்னத் ஷினோசுகா

கென்னத் ஷினோசுகா

தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பவர்கள் தூக்கத்தில் நடப்பதை தடுக்கும் வகையில் ஒரு கருவியை கண்டறிந்திருக்கின்றார் கென்னத், இந்த கருவியானது குறிப்பிட்ட நோயாளி கட்டிலில் இருந்து எழுந்தால் உடனே அவரது உறவினரோ அல்லது நண்பருக்கோ ஸ்மார்ட்போன் மூலம் தகவல் அனுப்பப்பட்டு விடும். இந்த கண்டுபிடிப்புக்காக கென்னத் 2014 ஆம் ஆண்டு 'சயின்ஸ் இன் ஆக்ஷன்' எனும் விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Smart Teenagers and Their Awe-Inspiring Science Fair Ideas. Read more in Tamil.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot