ஐஐடி மாணவர்களின் பயனுள்ள தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்.!!

By Meganathan
|

பொறியியல் எனப்படும் என்ஜினியரிங் படிப்பில் உண்மையான ஆர்வம் கொண்டு படிப்பவர்களை விட, படிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் கஷ்டப்படுபவர்களே அதிகம் எனலாம். கஷ்டப்படுவதை விட இஷ்டப்பட்டதை செய்தால் கட்டாயம் வெற்றி பெற முடியும் என்பதே உண்மை.

இதை சரியாக புரிந்து, உண்மையான ஆர்வம் கொண்டு பொறியியல் படிக்கும் போதே மாணவர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு அதிபதியாகியிருக்கின்றனர். அவ்வாறு ஐஐடி மாணவர்கள் கண்டறிந்த சில பயனுள்ள கண்டுபிடிப்புகளை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

ட்ரூஎச்பி ஹீமோமீட்டர்

ட்ரூஎச்பி ஹீமோமீட்டர்

உடலில் இரத்தச்சோகை இருக்கின்றதா என்பதை அறிந்து கொள்ளும் மொபைல் போன் வடிவில் சிறிய கருவி தான் ட்ரூஎச்பி ஹீமோமீட்டர். இதனை ஐஐடி-தில்லி மாணவர் அம்பர் ஸ்ரீவஸ்தவா கண்டுபிடித்தார்.

சிறிய வீடு

சிறிய வீடு

கட்டுமானம், ராணுவ தளம் மற்றும் ஆபத்து காலங்களில் எளிமையாக கட்டமைக்க கூடிய, எளிதில் எடுத்து செல்லக்கூடிய சிறிய வகை வீடு ஐஐடி-காந்திநகர் மாணவர்களின் கண்டுபிடிப்பாகும்.

டூயல் பின் ஸ்டாப்ளர்

டூயல் பின் ஸ்டாப்ளர்

ஐஐடி காந்திநகர் மாணவர்களின் கண்டுபிடிப்பு தான் டூயல் பின் ஸ்டாப்ளர். இந்த ஸ்டாப்ளரில் இரு வித அளவுகளில் கிடைக்கும் ஸ்டாப்ளர் பின்களை பயன்படுத்த முடியும்.

கூகுள் நியுஸ்

கூகுள் நியுஸ்

முன்னாள் ஐஐடி-மட்ராஸ் மாணவரான கிருஷ்னா பரத் உருவாக்கியது தான் கூகுள் நியுஸ். கூகுள் நிறுவனத்தின் மிக முக்கிய சேவைகளில் ஒன்றாக கூகுள் நியுஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்கேன்

ஸ்மார்ட்கேன்

ஐஐடி தில்லி மாணவர்களான ரோஹன் பால் மற்றும் ரோட்ஸ்-ஆஸ்ஃபோர்டு இணைந்து ஸ்மார்ட் கேனை கண்டறிந்தனர். பார்வையற்றவர்கள் நடக்கும் போது பாதையில் இருக்கும் இடர்பாடுகளை கண்டறியும் திறன் கொண்டது தான் ஸ்மார்ட்கேன்.

அட்வான்ஸ்டு ப்ரெத்தலைஸர் ஹெல்மட்

அட்வான்ஸ்டு ப்ரெத்தலைஸர் ஹெல்மட்

ஐஐடி-வாரனாசி மாணவர்களின் அதிநவீன கண்டுபிடிப்பு தான் ஸ்மார்ட் ஹெல்மட். இந்த ஸ்மார்ட் ஹெல்மட் மது அருந்தியவர்களை வாகனம் இயக்க விடமால் செய்யும் திறன் கொண்டது.

டீ-சர்ட்

டீ-சர்ட்

மனதில் நினைபவற்றை டீ-சர்ட்களில் அடிக்கடி மாற்றி எழுத வழி செய்யும் புதிய வகை டீ-சர்ட்கள் ஐஐடி-பாம்போ மாணவர்களின் கண்டுபிடிப்பாகும்.

நெத்ரா

நெத்ரா

உத்தர்கண்ட் மாநிலத்தின் வெள்ளத்தில் மீட்பு பணிகளில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா டிரோனி விமானம் தான் நெத்ரா. இது ஐஐடி-பாம்பே மாணவர்களின் கண்டுபிடிப்புகளாகும்.

மட்ஸ்யா

மட்ஸ்யா

கடல் சார்ந்த ஆய்வு மற்றும் மீட்பு பணிகளில் பயன்படுத்தக்கூடிய இந்த கண்டுபிடிப்பு ஐஐடி-பாம்பே மாணவர்களின் கண்டுபிடிப்பாகும்.

சேஃபர்

சேஃபர்

ஐஐடி-தில்லி மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு பெண்களின் பாதுகாப்பிற்கு வழி செய்யும் நோக்கில் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் இயர்ஃபோன்

ஸ்மார்ட் இயர்ஃபோன்

ஐஐடி-ரூர்கீ மாணவர்களின் இந்த ஹெட்போன் உங்களுக்கு தேவையான சத்தத்தை மட்டும் தேர்வு செய்து கேட்க வழி செய்கின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Smart Inventions By our IIT Students. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X