பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான பிரத்யேக 3டி கண்ணாடி

Written By:

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான கண்ணாடிகளை, தயாரிப்பதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள கண்ணாடியில் முப்பரிமாண கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவுடன் கணினியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா படம் பிடிக்கும் காட்சிகள் கணினிக்கு சென்று பின் அந்த கணினியில் இருந்து மீண்டும் இந்த சிறப்புக் கண்ணாடியில் முப்பரிமாணத் தோற்றத்தில் தோன்றும்.

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான 3டி கண்ணாடி

முப்பரிமாண கேமரா படம் பிடித்த காட்சிகள் கணினியில் மேம்படுத்தப்பட்டு கண்ணாடியில் தெரியும் போது அதிக பிரகாசமாகவும், தெளிவாகவும் இருக்கும். குறைந்த பார்வைத்திறன் உள்ளவர்களால் காட்சிகளை பிரகாசமாக பார்க்க முடியும். இது அவர்கள் இருக்கும் சூழலில் எளிதாக நடமாட உதவுகிறது.
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான 3டி கண்ணாடி

தற்சமயம் இந்த கண்ணாடி தலைக்கவச வடிவில் இருக்கின்றது. இந்த கண்ணாடி மடிக்கணினியுடன் இணைக்கப் பட்டுள்ளதால் இதை பயன்படுத்துவோர் பெரிய தலைக் கவசத்துடன், கையில் மடிக்கணினி சுமந்தபடி இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கண்ணாடியின் செயல்திறன் மேம்படுத்தப் படும்போது முப்பரிமாணக் கண்ணாடியின் அளவு ஒரு சாதாரண கண்ணாடி அளவில் இருக்கும் என்று இதை உருவாக்கிய ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more about:
English summary
3D Smart glasses made specially for Blind people
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot