குழந்தைகளை படு ஸ்மார்ட்டாக மாற்றும் ஸ்மார்ட் போர்டு!

Posted By: Staff
குழந்தைகளை படு ஸ்மார்ட்டாக மாற்றும் ஸ்மார்ட் போர்டு!

கரும்பலகையில் எழுதி அழித்த காலம் மலையேறி போய்விட்டது. புதிதாக ஸ்மார்ட் போர்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போர்டு ஸ்மார்ட் பிள்ளைகளை, நிச்சயம் டபுள் ஸ்மார்ட்டாக மாற்றிவிடும்.   ஸ்மார்ட் போர்டு-800, ஸ்மார்ட் போர்டு-807 என்று இரண்டு மாடல்கள் உள்ளன.  807 ஸ்மார்ட் போர்டு 4 டச் இன்டிராக்டிவ் தொழில் நுட்பத்தினை கொண்டுள்ளது.

அதாவது ஸ்மார்ட்போனில் உள்ள தொடுதிரை வசதியில் ஒரு விரல் கொண்டு பயன்படுத்துவது போல, இந்த ஸ்மார்ட் போர்டில் நான்கு விரல்கள் கொண்டும் பயன்படுத்தலாம். அடுத்த பக்கத்துக்கு மாறவோ அல்லது வேறு பதிலை பெற வேண்டும் என்றாலோ, நான்கு விரல்களையும் இந்த ஸ்மார்ட் போர்டில் பயன்படுத்தி எளிதாக டிராக் செய்யலாம்.

இந்த ஸ்மார்ட் போர்டில் ஒரு பெரிய சவுகரியம் என்னவென்றால் ஒரே சமயத்தில் நான்கு பேர் கூட இந்த போர்டை பயன்படுத்த முடியும். இதில் மல்டி யூசர் ரைட்டிங் வசதி உள்ளது. இது போன்ற புதுமையான தொழில் நுட்பங்கள் பிள்ளைகள் படிக்க புது ஆர்வத்தை உண்டு செய்யும் என்பது உண்மை தான்.

விண்டோஸ்-7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்மார்ட் போர்டு, சிறந்த தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும்.  நேரில் பார்ப்பது போலவே சிறப்பான துல்லியத்தினை பெற இதில் டிவிஐடி (டிஜிட்டல் விஷன் டச்)  பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போல் பல சவுகரியங்களை அள்ளி தரும் வகையில் இந்த ஸ்மார்ட் போர்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மக்களை நவீன உலகிற்கு மாற்றி வரும் இது போன்ற புதிய தொழில் நுட்பங்களினால், வாடிக்கையாளர்களும் புதுமை விரும்பிகளாக மாறி வருகின்றனர்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot